பன்னாட்டு இளையோர் கண்டுபிடிப்பு, புத்தாக்கப் போட்டியில் நமது காஜாங் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 20 மாணவர்கள் சிறப்பான சாதனையைப் படைத்து பள்ளிக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
இந்தப் போட்டியில் மாணவர்கள் தங்களது புதுமையான கண்டுபிடிப்புகள், அறிவியல் திறமைகளை வெளிப்படுத்தி, 2 தங்கப் பதக்கங்கள், 1 வெள்ளிப் பதக்கம், 1 வெண்கலப் பதக்கம், புத்தாக்கச் சிறப்பு விருதினை பெற்றுள்ளனர்.
குறிப்பாக மாணவர்கள் சபேரேஷ் நாயர் இராம் குமார், சஞ்ஜெஷ் குமரன், தன்ஷிகா இராமு, தர்ஷன் ஜெயேந்திரன், அர்வின் கிருஷ்ணா பால முருகன் உருவாக்கிய என்ற புத்தாக்கத் திட்டம் சிறந்த கண்டுபிடிப்பாகத் தேர்வு செய்யப்பட்டு தங்க விருதையும் சிறப்பு புத்தாக்க விருதையும் வென்றது. இந்தக் கண்டுபிடிப்பு ஓட்டுநர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டதாகும்.
மாணவர்களின் இந்த மகத்தான சாதனை ஆசிரியர்கள், பெற்றோர், பள்ளி நிர்வாகத்தினரிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளித் தலைமையாசிரியர் திருமதி இரா. சாந்தி மாணவர்களைப் பாராட்டி, இத்தகைய சாதனைகள் மற்ற மாணவர்களுக்கும் ஊக்கமாக அமையும் என தெரிவித்தார். மேலும் மாணவர்களின் உழைப்பு, புதுமை சிந்தனை, குழு ஒத்துழைப்பே இந்த வெற்றிக்கு காரணம் என ஆசிரியர்கள் குறிப்பிட்டனர்.மாணவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! உங்கள் வெற்றி தொடரட்டும். இணைவோம் வெல்வோம்.









