ஸ்தாப்பாக் மாஹர் தஹ்ஃபிஸ் அல்-பரீதியா மதராஸாவில் ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டம்: ஏழை எளியோருக்குக் குர்பானி இறைச்சி விநியோகம்

உலகெங்கும் வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் தியாகத் திருநாளான ஹஜ்ஜுப் பெருநாளை நேற்று மிகுந்த பக்தி சிரத்தையுடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடி மகிழ்ந்தனர். இதன் ஒரு பகுதியாக, கோலாலம்பூரில் புகழ்பெற்ற ஸ்தாப்பாக் பகுதியில் அமைந்துள்ள ‘மாஹர் தஹ்ஃபிஸ் அல்-பரீதியா’ மதராஸாவில் ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டம் மிக விமரிசையாக நடைபெற்றது.

மதராஸாவின் தலைவர் டத்தோ ஹாஜி ஜவாஹர் அலி தலைமையில் இந்தச் சிறப்பு நிகழ்வுகள் ஒருங்கிணைக்கப்பட்டன. தியாகத் திருநாளின் மிக முக்கியக் கடமையான குர்பானி கொடுக்கும் நிகழ்வு இங்கு முறைப்படி நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களின் பசிப்பிணி போக்க குர்பானி கொடுப்பது இந்த மதராஸாவின் வழக்கமாகும்.

அந்த வகையில், இந்த ஆண்டும் தியாக உணர்வைப் போற்றும் விதமாக 150-க்கும் மேற்பட்ட ஆடுகள் குர்பானி கொடுக்கப்பட்டதாக டத்தோ ஹாஜி ஜவாஹர் அலி தெரிவித்தார். பின்னர், அந்த இறைச்சிகள் துண்டுகளாக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கும் தேவையுடையோருக்கும் அன்போடு பகிர்ந்து அளிக்கப்பட்டன. திரளான இஸ்லாமியப் பெருமக்கள் கலந்து சிறப்பித்த இந்த நிகழ்வு நேர்த்தியாக நிறைவுற்றது.

( பி. மலையாண்டி )

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here