ஒவ்வொருவருக்கும் ஒரு இலக்கு இருக்கும். அந்த வகையில் ஆதிகுமணின் எழுத்தே எனக்கு ஏழை எளியோருக்கு உதவிட வேண்டும் என்று எண்ணம் தோன்றியதகாகவும் அதன் தாக்கமே ஜாவா என்ற அரசுசாரா இயக்கத்தை தொடங்க உந்து கோலாக இருந்ததாக அதன் தலைவர் கிருஷ்ணராஜா கிருஷ்ணன் தெரிவித்தார்.
2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அரசு சாரா இயக்கம் 10ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதாகவும் கூறினார். இந்த 10 ஆண்டுக் காலத்தில் எங்களால் முடிந்தவளவிற்கு இல்லாதவர்களுக்கும் இயலாதவர்களுக்கும் உதவிகளை வழங்கி வருகிறோம். அதிலும் கோவிட் காலகட்டத்தில் பலருக்கு உதவிகளை வழங்கினோம்.

நாங்கள் இந்த 10 ஆண்டில் வழங்கி வரும் உதவிகள் அனைத்தும் எங்களின் 103 உறுப்பினர்கள் வழங்கி வரும் நன்கொடையைக் கொண்டே செய்து வருவதாகவும் அவர் சொன்னார். நாங்கள் செல்லும் குறிப்பாக பிபிஆர் இல்லங்களில் இருக்கும் பலருக்கு உதவிகள் தேவைப்படுகிறது. எங்களை போன்ற இதர அரசு சாரா இயக்கமும் இது போன்ற உதவிகளை வழங்க வேண்டும் என்பதே எங்களின் அவா. குறிப்பாக பள்ளிக்கு செல்ல ஆசைப்படும் பல மாணவர்கள் பேருந்து கட்டணம் செலுத்த முடியாத நிலையில் இருக்கின்றனர்.

அம்மாதிரியான மாணவர்களுக்கு உதவி வழங்கினால் நமது சமுதாயம் கல்வியில் சிறந்த சமுதாயமாக விளங்க முடியும் என்று தெரிவித்தார். 10ஆம் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக ஐசீட் சிலாங்கூர் ஒருங்கிணைப்பாளர் மாதவன் முனியாண்டி கலந்து ஆதரவற்ற இல்லத்திற்காக நன்கொடையை எடுத்து வழங்கினார்.









