ஸ்ரீபெரும்புதூர்: தனியார் தொழிற்சாலையில் தீ விபத்து – ரூ.100 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பல்

ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுக் கோட்டை சிப்காட்டில் உள்ள தனியார் எலக்ட்ரானிக்ஸ் உதரிபாகங்கள் உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, ஆலையின் ஒரு பகுதியில் உள்ள சேமிப்பு கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, பணியில் இருந்த தொழிலாளர்கள் அனைவரும் பத்திரமாக தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

பதற்றமான நிலை

தீ மளமளவென தொழிற்சாலையின் மற்ற பகுதிகளுக்கும் பரவியது. மேலும், தீ விபத்தால் அதிமான கரும்புகை வெளியேறியதால் சிப்காட் பகுதி முழுவதும் பதற்றமான நிலை ஏற்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த ஸ்ரீபெரும்புதூர், படப்பை மற்றும் இருங்காட்டுக்கோட்டை தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடினர். இந்த தீ விபத்தில் ரூ.100 கோடி மதிப்புள்ள பொருள்கள் தீயில் எரிந்து சாம்பலாகின. இந்த சம்பவம் குறித்து ஒரகடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here