ஜோகூர் பாருவில் உள்ள உணவு வளாகங்களில் குடிநுழைவுத்துறையினர் அதிரடி சோதனை: 72 வெளிநாட்டு ஊழியர்கள் கைது!

ஜோகூர் பாரு:

இங்குள்ள பல உணவு வளாகங்களில் (Food Courts) நடத்தப்பட்ட கூட்டு அதிரடி சோதனையில், முறையான ஆவணங்களின்றி வேலை செய்து வந்த 72 வெளிநாட்டு ஊழியர்களை மலேசிய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில், ஜோகூர் மாநில குடிவரவுத்துறை (Immigration Department), மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமை (MCBA) மற்றும் சுங்கத்துறை (Customs Department) ஆகியவை இணைந்து இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டன.

குடிநுழைவு சட்டம் 1959/63-ன் கீழ் முறையான வேலை அனுமதி பத்திரம் (Permit) இல்லாமல் வேலை செய்தது மற்றும் சமூக வருகை பாஸை (Social Visit Pass) தவறாகப் பயன்படுத்தியது.

19 முதல் 46 வயதுக்குட்பட்ட 72 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் உணவக உதவியாளர்கள், பரிமாறிகள் (Waiters) மற்றும் சமையல்காரர்களாகப் பணிபுரிந்து வந்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் வியட்நாம் நாட்டைச் சேர்ந்த 37 பெண்கள், 3 ஆண்கள், மியன்மார் நாட்டைச் சேர்ந்த 17 ஆண்கள், இந்தோனேசியா நாட்டைச் சேர்ந்த 10 பெண்கள், 4 ஆண்கள் மற்றும் சீனாவைச் சேர்ந்த 1 பெண் ஆகியோர் அடங்குவர் என்று, மாநில குடிநுழைவுத்துறை இயக்குனர் டத்தோ முகமது ருஷ்டி முகமட் தாருஸ் கூறினார்.

உளவுத்துறைத் தகவல் மற்றும் தொடர் கண்காணிப்பிற்குப் பிறகே இந்தச் சோதனை நடத்தப்பட்டதாகவும், தற்போது கைது செய்யப்பட்ட அனைவரும் செத்தியா ட்ரோபிகா குடிநுழைவு தடுப்பு முகாமில் (Setia Tropika Immigration Depot) வைக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உதவும்படி 5 நபர்களுக்கு ‘படிவம் 29’ (Form 29) நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here