மலேசிய அரசின் 16 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு சமூக ஊடக தடை மக்கள் வரவேற்பு!

மலேசியாவில் 16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் முகநூல் , இன்ஸ்டாகிராம் , டிக்டாக் , மற்றும் யூடியூப் போன்ற முக்கிய சமூக ஊடகத் தளங்களில் புதிய கணக்குகளைப் பதிவு செய்ய இனி அனுமதி இல்லை என அரசாங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது. ஜூன் 1, 2026 முதல் அமலுக்கு வந்துள்ள இப்புதிய விதியின் கீழ், ஏற்கனவே கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களின் கணக்குகள் முடக்கப்படுவதற்கு முன்பு, தங்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மாற்றுவதற்கு ஒரு மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

சி.ஆறுமுகம்.

​பெற்றோர் ஒப்புதல், நேரக் கட்டுப்பாடு மற்றும் உள்ளடக்கக் கட்டுப்பாடு ஆகிய முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய இந்த அதிரடி நடவடிக்கை குறித்து, நாட்டின் பல்வேறு தரப்பினரைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களின் கருத்துக்களைப் மக்கள் ஓசையுடன் பகிர்ந்து கொண்டனர்.
​​சமூக ஊடகங்களுக்கான இந்த அரசு சட்டம் ஒருபுறம் இருந்தாலும், இளம் பெற்றோர்கள் தங்களின் மிகச் சிறிய குழந்தைகளுக்குக் கைத்தொலைபேசிகளை விளையாடுவதற்கோ அல்லது அமைதியாக இருப்பதற்கோ கொடுப்பதைத் தங்களின் சுயக்கட்டுப்பாடாகக் கொண்டு முற்றிலும் தவிர்க்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பெண்மணிகள் வலியுறுத்தினர். ​சிறு வயதிலேயே கைத்தொலைபேசிப் பழக்கத்திற்கு அடிமையாகும் குழந்தைகள், பிற்காலத்தில் சமூக ஊடகங்களின் திரை போதைக்கு மிக எளிதாக ஆளாகிவிடுகிறார்கள். எனவே, அடிமட்டத்திலிருந்தே இந்தப் பழக்கத்தை மாற்றுவது பெற்றோரின் கைகளில்தான் உள்ளது.

இரா.குணசேகரன்.

​”அரசாங்கத்தின் இந்த முடிவு மிகவும் காலோசிதமானது. இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் என்பது எதிரி அல்ல என்றாலும், அதன் பயன்பாடு ஒருவருடைய வயது மற்றும் முதிர்ச்சியின் நிலைக்கு ஏற்ப மட்டுமே இருக்க வேண்டும். 16 வயதிற்கு உட்பட்ட பிள்ளைகளைப் பாதுகாத்து, அவர்களின் எதிர்காலத்தை நல்வழியில் உருவாக்குவதற்கு இந்தச் சட்டம் ஒரு வலுவான அடித்தளமாக அமையும்.” என்று டத்தோ சீனிவாசன் தெரிவித்தார்.
​​”பிள்ளைகளின் மனவளர்ச்சியும் குணநலன்களும் தூய்மையாக இருக்க வேண்டும். வல்லுநர்களின் கூற்றுப்படி, பதின்ம வயதின் இறுதிவரை சுயக்கட்டுப்பாடு மற்றும் சரியான முடிவுகளை எடுக்கும் மூளையின் பகுதிகள் முழுமையாக வளர்ச்சியடைவதில்லை.

டத்தோ சீனிவாசன்.

​”இன்றைய சிறுவர்கள் தங்களை இணையத்தில் மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் தவறான கலாச்சாரத்தினால் மன அழுத்தம், கவலை மற்றும் மனச்சோர்வு போன்ற மனநல பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள். ​”சமூக ஊடகங்கள் மூலம் சிறுவர்கள் கிண்டல், கேலி மற்றும் சைபர் புல்லிங் (இணையக் கொடுமை) போன்ற ஆபத்துகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். மேலும் அறியாமையினால் தங்களின் தனிப்பட்ட விபரங்களை இணையத்தில் பகிர்ந்து, அடையாளந் தெரியாத நபர்களால் ஏமாற்றப்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகம். இந்தத் தடை அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் என்று சமூக ஆர்வலர்கள் இரா. குணசேகரன், நா.கேசவன் , சிவஸ்ரீ மணிவண்ணன் குருக்கள், சி.ஆறுமுகம் ஆகியோர் தெரிவித்தனர்.

அளவுக்கு அதிகமான சமூக ஊடகப் பயன்பாட்டினால் சிறுவர்கள் தங்களின் ஸ்மார்ட்போன்களிலேயே முழுமையாக மூழ்கி விடுகின்றனர். இது அவர்களின் அன்றாட ஆரோக்கியமான செயல்பாடுகளையும், குடும்பத்துடனான நேரத்தையும் முற்றிலும் முடக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

​​”சமூக ஊடகங்களில் சிறுவர்களின் வயதிற்குப் பொருந்தாத வன்முறை மற்றும் தவறான உள்ளடக்கங்கள் மிக எளிதாகக் கிடைக்கின்றன. சட்டம் ஒருபுறம் இருந்தாலும், இளம் பெற்றோர்கள் ஆரம்பத்திலிருந்தே குழந்தைகளுக்குக் கைத்தொலைபேசி கொடுப்பதைத் தவிர்ப்பதும், அவர்களின் பயன்பாட்டு நேரத்தைக் கட்டுப்படுத்துவதும் மிக மிக அவசியமாகும்.

​”இந்தக் கட்டுப்பாடு பிள்ளைகளின் நேர நிர்வாகத்தை மேம்படுத்தும். சமூக ஊடக அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு, அவர்கள் தங்களின் கலை, விளையாட்டு மற்றும் இதர பயனுள்ள திறன்களை வளர்த்துக் கொள்ள இச்சட்டம் ஒரு தூண்டுகோலாக,

 


சமூக ஊடகங்களால் ஏற்படும் திரை போதை, மனநல பாதிப்பு, சைபர் புல்லிங் மற்றும் கல்விச் சீரழிவு போன்ற முக்கிய பாதிப்புகளில் இருந்து நமது இளைய தலைமுறையைக் காக்க மலேசிய அரசு எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கைக்கு நாட்டின் அனைத்துத் தரப்பிலிருந்தும் வரவேற்பு பெற்று வருகிறது . ஆகவே இத்திட்டம் நூறு விழுக்காடு வெற்றியடையும் என்பது நிதர்சனமான உண்மையாகும் என்று திருமதி சுப்புலட்சுமி மருதமுத்து, திருமதி வள்ளி, திருமதி சாந்தி ஆகியோர் தெரிவித்தனர்.

 

பி.ராமமூர்த்தி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here