சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்க விழாவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் பிகில் படத்தின் ‘சிங்கப் பெண்ணே’ பாடலும், மெர்சல் படத்தின் ‘ஆளப் போறான் தமிழன்’ பாடலும் இசைக்கப்பட்டது தன்னுடைய பட பாடல்கள் இசைக்கப்படும் போது அதை முதல்-அமைச்சர் விஜய் கண்டு ரசித்தார். ‘சிங்கப்பெண்ணே..’, மெர்சல் படத்தின் ‘ஆளப்போறான் தமிழன்..’ பாடல்கள் வாசித்த போலீஸ் வாத்தியக் குழுவினர் இவற்றை ரசித்துக் கேட்ட விஜய், கைதட்டி பாராட்டினார்.
சிங்கப்பெண் திட்டத்திற்கு முதற்கட்டமாக ரூ.354 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கப்படவுள்ளது. திட்டத்தின் 2ம் கட்டமாக இந்த படைக்காக மட்டுமே 2,500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பபடவுள்ளது.
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை திட்டத்தை தொடங்கி வைத்ததோடு அதற்கான பிரத்யேக ரோந்து வாகனங்களை இயக்கி பார்த்தார் முதல்-அமைச்சர் விஜய்.









