ஜாகார்த்தாவில் போதைப்பொருட்களுடன் 3 மலேசியப் பெண்கள் கைது!

கோலாலம்பூர்:

இந்தோனேசியாவின் ஜாகார்த்தாவில் உள்ள சோகர்னோ-ஹாட்டா சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருட்களை வைத்திருந்ததற்காக 3 மலேசியப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மலேசியக் காவல் துறை உறுதிப்படுத்தியுள்ளது.

சபாவைச் சேர்ந்த 30 முதல் 39 வயதுடைய அந்தப் பெண்கள், கோத்தா கினபாலுவிலிருந்து விமானம் மூலம் ஜாகார்த்தா சென்றடைந்தபோது அங்குள்ள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக மலேசிய கூட்டரசு போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ ஹுசைன் ஓமார் கான் 3
தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களில் இருவர் மீது ஏற்கனவே போதைப்பொருள் தொடர்பான குற்றப் பின்னணி உள்ளது என்றும், அவர்கள் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு அடிமையானவர்கள் என்றும் டத்தோ ஹுசைன் கூறினார்.

அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் அளவு மிகக் குறைவாக இருப்பதால், அவை கடத்துவதற்காக அல்லாமல் சொந்தப் பயன்பாட்டிற்காகவே கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் எனப் போலீசார் கருதுகின்றனர்.

வெளிநாடுகளில் கைது செய்யப்பட்ட மற்ற மலேசிய போதைப்பொருள் கடத்தல் வழக்குகளுக்கும் இவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

கடந்த திங்கள்கிழமை, விமான நிலையத்தின் வருகை மண்டபத்தில் அவர்களது சந்தேகத்திற்கிடமான நடத்தையைக் கண்டு அதிகாரிகளுக்குச் சந்தேகம் ஏற்பட்டது.

அவர்களது உடமைகளைச் சோதனையிட்டபோது, கழிப்பறைப் பொருட்கள் வைக்கும் பைகள், கைப்பைகள், மருந்துப் பாக்கெட்டுகள், ஜாக்கெட் மற்றும் அவர்கள் அணிந்திருந்த காலணிகளுக்குள்ளும் போதைப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்களிடமிருந்து கொகேன், MDMA, கெட்டமைன் பொடி, மாத்திரைகள், போதை வேப் கார்ட்ரிட்ஜ்கள் மற்றும் கெட்டமைன் கலந்த புகையிலைச் சுருள்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

சமீபகாலமாக வெளிநாடுகளில் மலேசியர்கள் போதைப்பொருள் விவகாரங்களில் கைதாவது அதிகரித்து வருகிறது:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here