(BAeK PTPTN) தேவையுடையோரின் உயர்கல்விக் கனவை நனவாக்கும் திட்டம்
2026-ஆம் ஆண்டுக்கான வருவாய்ச் செலவுத் திட்டம், மலேசிய உயர்கல்விப் திட்டம் (RPTM) 2026-2035 ஆகியவற்றின் அறிவிப்புகளுக்கு இணங்க, ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான பிடிபிடிஜென் (PTPTN) கல்வி உபகாரச் சம்பளம் / இலவசக் கல்வித் திட்டத்தின் பயனாளிகளின் (BAeK PTPTN) எண்ணிக்கை 10,000 மாணவர்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 2026 ஜூன் 13 ஆம் நாள் ஜோகூரில் நடைபெற்ற eKasih PTPTN பிள்ளை கல்வி உபகாரச் சம்பளம் (BAeK PTPTN) வழங்கும் விழாவை உயர்கல்வி அமைச்சர் தத்தோ ஸ்ரீ திராஜா டாக்டர் செம்ரி அப்துல் காதிர் அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பிடிபிடிஜென் தலைவர் தத்தோஸ்ரீ நோர்லிசா அப்துல் ரஹீம் பங்கேற்றார். இந்த BAeK PTPTN கல்வி உபகாரச் சம்பளம் வழங்கும் திட்டம், 2026 ஜூலை 15 ஆம் தேதி மலாக்காவில் உள்ள மாரா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (UiTM), போலி டெக்னிக் மெலாக்கா (Politeknik Melaka) ஆகியவற்றைச் சேர்ந்த இரண்டு (2) மாணவர்களை உள்ளடக்கித் தொடரவுள்ளது. இதனை உயர்கல்வித் துணை அமைச்சர் தாதோ அஞ்லி அப்துல் ஹலீம் நிறைவு செய்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மலாக்கா மாநில பிடிபிடிஜென் அலுவலக இயக்குநர் புவான் மாஸ் அனிசா அயு பிந்தி ஓஸ்மானும் பங்கேற்றார்.
ஜோகூரில் நடைபெற்ற BAeK PTPTN வழங்கும் விழாவின் போது, பிடிபிடிஜென் தலைவர் தத்தோஸ்ரீ நோர்லிசா உரையாற்றுகையில், இத்திட்டம் 2026-இல் அறிமுகப்படுத்தப்பட்டது முதல் 2026 மே 31 வரை, நாடு முழுவதும் மொத்தம் 402 மாணவர்கள் இதன் மூலம் பயனடைந்துள்ளனர் என்றும், இதற்காக 8.79 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
இந்த BAeK PTPTN கல்வி உதவித்தொகையின் அமலாக்கத்தின் வழி, eKasih தரவுத்தளத்தில் பதிவு செய்யப்பட்டு, 2026 ஜனவரி 1 முதல் பொது உயர்கல்வி நிறுவனங்களில் (IPTA) முழுநேரமாக டிப்ளோமா அல்லது இளங்கலைப் பட்டம் படியும் ஏழை மேலும் கடுமையான வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு, பிடிபிடிஜென் கடன் உதவித்தொகை முழுமையான கல்வி உதவித்தொகையாக (Scholarship) மாற்றப்பட்டு வழங்கப்படும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
சமூக-பொருளாதாரப் பின்னணி என்பது உயர்கல்வியைத் தொடர்வதற்கான வாய்ப்புகளுக்கு ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்வதில் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பும் அக்கறையும் இந்த முன்முயற்சி நிரூபிக்கிறது. BAeK PTPTN திட்டத்தின் மூலம், தேவையுடைய பிரிவினரின் உயர்கல்விக் கனவை ஒரு விரிவான நிதி ஆதரவின் வழி நனவாக்க முடியும். அதே வேளையில், இது மாணவர்கள் கல்வித் துறையில் சாதனை படைப்பதற்கும் கடன் சுமையின்றி தங்களது தொழில் வாழ்க்கையைத் தொடங்குவதற்கும் ஊக்கமளிப்பதாக அமையும்.








