கிறிஸ்துவ வழிபாட்டுத் தலம் சேதப்படுத்தப்பட்ட விவகாரம்; 5 பள்ளி மாணவர்கள் கைது!

கோலாலம்பூர்:

சபாவின் பெனாம்பாங், சினுந்து குன்றில் உள்ள கிறிஸ்துவ வழிபாட்டுத் தலம் ஒன்று சேதப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, 13 முதல் 16 வயதுக்குட்பட்ட ஐந்து இடைநிலைப்பள்ளி மாணவர்கள் புதன்கிழமை அன்று புத்தாத்தான் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைதை உறுதிப்படுத்திய பெனாம்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பரிண்டெண்டண்ட் சாமி நியூட்டன், ஆரம்பக்கட்ட விசாரணையின்படி இந்த மாணவர்களுக்கு எந்தவொரு மதத்தையும் அவமதிக்கும் நோக்கம் இருக்கவில்லை என்றும், இது வெறும் போது சொத்துகளை சேதப்படுத்தும் நோக்கம் மட்டுமே என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.

சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தல் மற்றும் வழிபாட்டுத் தலங்களைச் சேதப்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த பதின்ம வயதினர் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பான காணொளிகளையோ அல்லது சந்தேக நபர்களின் புகைப்படங்களையோ சமூக ஊடகங்களில் பகிர்ந்து சட்ட நடைமுறைகளுக்குப் பாதகம் விளைவிக்க வேண்டாம் எனப் பொதுமக்களைக் கேட்டுக்கொண்ட போலீசார், தேவையற்ற ஊகங்களைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here