மலேசியா தமிழ்ப் பண்பாட்டு இயக்கமும் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கமும் இணைந்து, மலேசியா நாட்டில் உள்ள சீபீல்டு தமிழ்ப்பள்ளி வளாகத்தில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 200ஆவது திருவள்ளுவர் சிலையினை, அதன் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் அவர்களும் தொழிலதிபர் ஓம்ஸ் தியாகராஜன் அவர்களும் இணைந்து திறந்து வைத்தனர். இவ்விழாவில், விழாவிற்கான ஒருங்கிணைப்பாளர், மலேசிய தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் தலைவர் திரு. சண்முகம், மல்லைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் மல்லை திரு.சத்யா, கனடா நாட்டின் உலகப் பண்பாட்டு இயக்த்தின் தலைவர் திரு.ராஜரத்தினம், இயக்கத்தின் உறுப்பினர்கள், தமிழறிஞர்கள், பள்ளி மாணவ மாணவியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் கூறுகையில், “இந்நாளை விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்திற்கு ஒரு பொன்னாளாகக் கருதுகிறேன். மலேசியா நாட்டில் விஜிபியின் 200ஆவது திருவள்ளுவர் சிலையினைத் திறப்பதில் நான் மிகவும் பெருமையடைகிறேன்! 200 சிலைகள் உலகெங்கிலும் நிறுவுவதற்கு ஒத்துழைத்த அனைத்துத் தமிழ் மக்களுக்கும் என் இதயங்கனிந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அய்யன் திருவள்ளுவரின் திருவுருவச் சிலைகளை நிறுவுவதே எனது நோக்கமாகும் என்றார்.









