அகில் அக்கினேனி நடிப்பில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய ‘லெனின்’ திரைப்படம், தற்போது ஓடிடி வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது. ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த இந்த திரைப்படத்தின் டிஜிட்டல் வெளியீட்டு தேதி மற்றும் ஓடிடி தளம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 7 முதல் ஓடிடியில்
கடந்த ஜூலை மாதம் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த ஆக்ஷன் திரைப்படம், வருகிற ஆகஸ்ட் 7 முதல் ஜீ ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இதன் மூலம் திரையரங்குகளில் பார்க்க தவறவிட்ட ரசிகர்கள் வீட்டிலிருந்தபடியே படத்தை ரசிக்க முடியும்.
அகிலின் வெற்றிகரமான கம்பேக்
‘ஏஜென்ட்’ படத்தின் தோல்விக்குப் பிறகு, ‘லெனின்’ திரைப்படம் அகில் அக்கினேனிக்கு மிகப்பெரிய கம்பேக் படமாக அமைந்துள்ளது. கிராமப்புற பின்னணியில் உருவான இந்த படம், ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று, அவரது திரைப்பயணத்தில் அதிக வசூல் செய்த படமாகவும் மாறியுள்ளது.
கதை என்ன?
1990-களின் பின்னணியில் அமைந்துள்ள ஸ்ரீராம்புரம் கிராமத்தை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. சிறை தண்டனையை அனுபவித்து கிராமத்திற்குத் திரும்பும் லெனின், குடும்பத்தையும் கிராம மக்களையும் பாதுகாக்க தலைமுறை பகையை எதிர்த்து போராடுகிறார். காதல், பழிவாங்குதல் மற்றும் புரட்சி ஆகிய அம்சங்களுடன் திரைப்படம் உருவாகியுள்ளது.
நட்சத்திர பட்டாளம்
முரளி கிஷோர் அப்பூரு இயக்கியுள்ள இந்தப் படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சுனில், சிவாஜி, பிரமோத் பஞ்சு, பிரம்மாஜி, ஈஸ்வரி ராவ் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.























