கோத்தாபாரு:
கடந்த சனிக்கிழமை, கிளந்தானில் தானா மேராவில் உள்ள ஒரு சீனப் பள்ளியில் நடத்த கவர்ச்ச்சி நடன விருந்து தொடர்பில், அந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் மன்னிப்பு கோரியதுடன் அபராதமாக RM10,000 செலுத்தினார் என்று, கிளந்தான் உள்ளாட்சி, வீட்டுவசதி, சுகாதாரம், சுற்றுச்சூழல் குழுவின் தலைவர் ஹில்மி அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இந்த இரவு விருந்தில் நடந்த கவர்ச்சி நடன நிகழ்ச்சியை ஒரு சுரங்க நிறுவனத்தின் ஏற்பாடு செய்திருந்தது என்றும், இந்த நிகழ்வை ஏற்பாடு செய்வதற்கான அனுமதிக்கு ஏற்பாட்டாளர்கள் விண்ணப்பிக்கவில்லை என்றும் முன்னதாகக் கூறப்பட்டது.
மேலும் இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்களில் பெரும்பானோர் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் சொன்னார்.
இந்நிலையில் பெரும் சர்ச்சைக்குள்ளான இக் கவர்ச்சி நடனம் குறித்து சம்பந்தப்பட்ட ஏற்பாட்டாளர்கள் மாநில அரசுக்கும் உள்ளூர் நகராண்மைக் கழகத்திற்கு மன்னிப்பு கோரி கடிதம் அனுப்பியுள்ளனர் என்றும், RM10,0000 அபரராதத்தையும் செலுத்தியுள்ளனர் என்றும் ஹில்மி மேலும் கூறினார்.




















