இரண்டு டிரெய்லர்களுக்கு நடுவே ஆபத்தான முறையில் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் – சமூக வலைத்தளங்களில் வைரலாகும் காணொளி!

கோலாலம்பூர்:

சமூக வலைத்தளப் பக்கம் ஒன்றில் பகிரப்பட்ட டேஷ்கேம் காணொளியில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் இரண்டு பெரிய டிரெய்லர்களுக்கு நடுவே உள்ள இடைவெளியில் ஆபத்தான முறையில் ஊடுருவிச் செல்லும் காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘டேஷ் கேம் மலேசியா ஓனர்’ த்ரெட்ஸ் கணக்கில் பகிரப்பட்ட இக்காணொளியில், நின்றுகொண்டிருந்த இரண்டு கனரக வாகனங்களுக்கு நடுவே அந்த ஓட்டுநர் சென்றது பலரின் கண்டனத்திற்குள்ளானதுடன், ஓட்டுநர்களின் பாதுகாப்பற்ற போக்கு குறித்து நெட்டிசன்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களின் இதுபோன்ற விபரீதச் செயல்களால் ஏற்படும் ஆபத்துகள் குறித்துப் பலரும் எச்சரித்துள்ள நிலையில், இக்காணொளிக்கு ஆயிரக்கணக்கான விருப்பங்கள் கிடைத்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here