பேராக், கெரிக், தெமெங்கோரில் நேற்று நள்ளிரவு வாக்கில் 3.4 ரிக்டர் அளவிலான பலவீனமான நிலநடுக்கம் கண்டறியப்பட்டது. இந்த நிலநடுக்கம் அதிகாலை 12.06 மணிக்கு, 5.5 டிகிரி வடக்கு மற்றும் 101.3 டிகிரி கிழக்கு அட்சரேகை மற்றும் தீர்க்கரேகையில் நிகழ்ந்ததாக வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) தெரிவித்துள்ளது.
இதன் மையப்புள்ளி, பேராக், உலு பேராக்கிலிருந்து 9 கி.மீ வடகிழக்கில், 10 கி.மீ ஆழத்தில் அமைந்திருந்தது. கெரிக் பகுதியிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன, ஆனால் சுனாமி அச்சுறுத்தல் எதுவும் விடுக்கப்படவில்லை என்று மெட்மலேசியா இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின் அதிர்வுகளை உணர்ந்த பொதுமக்கள், மெட்மலேசியா வழங்கிய பாரத்தை பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மெட்மலேசியா நிலைமையைத் தொடர்ந்து கண்காணிக்கும் என தெரிவிக்கப்பட்டது.













