குவாந்தான்:
பகாங் மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ வான் ரோஸ்டி வான் இஸ்மாயில், நாளை முதல் கோலாலம்பூரிலுள்ள IJN எனப்படும் தேசிய இதய நிறுவனத்தில் சிகிச்சை பெறவுள்ளார்.
மேலும் மருத்துவர் குறிப்பிடும் தேதி வரை வான் ரோஸ்டி அங்குச் சிகிச்சை பெறத் திட்டமிட்டுள்ளார் என்று பகாங் மாநில அரசின் செயலாளர், டத்தோஸ்ரீ ஜுல்கிப்ஃளி பாக்கோப் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
அந்த வகையில், திட்டமிட்ட சிகிச்சைகளும் சுமூகமாக நடக்க அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து பிரார்த்தனை செய்யுமாறும் அவர் அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டார்.
























