சட்டமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் பேச்சுவார்த்தைக்கான கதவு திறக்கப்படும் !

(ரெ.மாலினி)

மலாக்கா:

ட்டமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னர் எந்தவொரு அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை,” என்று முதலமைச்சர் இன்று தொடர்பு கொண்டபோது தெரிவித்தார்.

அம்னோ தலைவருமான அஹ்மட் சாஹிட் முன்னதாக தேசிய முன்னணி (,பக்காத்தான் மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் ஆகிய கட்சிகளுக்கு இடையே அதிகாரப்பூர்வமற்ற கலந்துரையாடல்கள் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

எனினும், மலாக்கா சட்டமன்றம் கலைக்கப்பட்ட பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

இதனிடையே, தேர்தல் இயக்குநரான டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நேற்று கூறுகையில், எதிர்வரும் மலாக்கா மாநிலத் தேர்தலை எதிர்கொள்வதற்காக தேசிய முன்னணி உடனான ஒத்துழைப்பு அல்லது தொகுதிப் பங்கீடு தொடர்பில் இதுவரை தங்களுக்கு எந்தவொரு அதிகாரப்பூர்வ முடிவும் கிடைக்கவில்லை என்றார்.

மலாக்கா தே மு தலைவருமான அப்துல் ரவூஃப் உடனான கலந்துரையாடல்கள் இதுவரை இணையவழியாக மட்டுமே நடைபெற்றுள்ளதாகவும், அவை இன்னும் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நிலையை எட்டவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மலாக்கா சட்டமன்றத்தின் தற்போதைய பதவிக்காலம் டிசம்பர் மாத இறுதியில் முழுமையாக நிறைவடைய உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here