பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் மூத்த சகோதரர் இட்ருஸ் இப்ராஹிம் காலமானார்

கோலாலம்பூர்:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் மூத்த சகோதரரான இட்ருஸ் இப்ராஹிம் இன்று காலமானார்.

தமையனின் மறைவு குறித்துப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் தனது ஆழ்ந்த இரங்கலையும் துயரத்தையும் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு மலேசியாவிற்குத் திரும்பும் வழியில் இந்தத் துயரச் செய்தியைப் பெற்றதாகப் பிரதமர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“எனது வாழ்நாள் முழுவதும் பல நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட ஒருவர் இப்போது நம்மிடையே இல்லை என்பதை நினைக்கும் போது ஏற்படும் இழப்பை வார்த்தைகளால் விவரிக்க முடிவதில்லை. இந்த வேதனையான நிஜத்தை ஏற்றுக்கொள்ளும் போது என் மனம் எவ்வளவு கனமாக இருக்கிறது என்பதை இறைவன் மட்டுமே அறிவான்”என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இப்பதிவில் கூறியுள்ளார்.

அவரது கடைசி தருணத்தில் அருகில் இருக்க முடியாமல் போனது வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்ட பிரதமர், எதிர்பாராத இந்தப் பிரிவைத் தாங்கிக் கொள்வது கடினமாக இருந்தாலும், இறைவனின் விதியை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்தார்.

மேலும், தனது அண்ணன் விட்டுச் சென்ற இனிய நினைவுகளுக்கும் நற்செயல்களுக்கும் நன்றி தெரிவித்துள்ள பிரதமர், அவை என்றும் தங்களது குடும்பத்தினரின் நினைவுகளிலும் இதயங்களிலும் நீங்காமல் நிலைத்திருக்கும் என்றும் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here