வாடிக்கையாளர் போல நடித்து RM8,000 மதிப்புள்ள தொலைபேசிகளை திருடிய நபருக்கு போலீஸ் வலைவீச்சு

குவாந்தான்:

நேற்று இரவு இங்குள்ள ஒரு ஷாப்பிங் மாலிலுள்ள ஒரு தொலைபேசி கடையில், வாடிக்கையாளர் போல நடித்து, ஆடவர் ஒருவர் அங்கிருந்து சுமார் RM8,000 மதிப்புள்ள மூன்று மொபைல் போன்களை திருடிச் சென்றுள்ளார்.

இரவு 8:45 மணிக்கு இந்த சம்பவம் நிகழ்ந்தபோது, சந்தேக நபர், மெரூன் ஜாக்கெட் மற்றும் முகக்கவசம் அணிந்து, மூன்று போன்களுடன் தப்பிச்சு சென்றார் என்று,
குவாந்தான் மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏ. சி. பி ஆஷாரி அபு சமா கூறினார்.

“கடை உதவியாளர் சந்தேக நபரை துரத்த முயன்றார், ஆனால் தோல்வியடைந்தார்” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இவ்வழக்கு திருட்டுக்கான தண்டனைச் சட்டத்தின் 380 வது பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும், விசாரணைக்கு உதவுவதற்காக சம்பவ இடத்திலிருந்து சிசிடிவி காட்சிப்பதிவுகளை போலீசார் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

“வெளிநாட்டவர் என நம்பப்படும் சந்தேக நபரை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர், மேலும் தகவல்களுடன் பொதுமக்கள் குவாந்தான் மாவட்ட காவல் தலைமையகத்தை (ஐபிடி) 09-5652222 என்ற எண்ணில் அல்லது அருகிலுள்ள எந்த காவல் நிலையத்தையும் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here