ஓடிடியில் வெளியாகும் அஷ்ரப்பின் “போட்டோகிராபர்” திரைப்படம் .. எதில் பார்க்கலாம்?

அஷ்ரப்பின் ‘போட்டோகிராபர்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

‘ரா’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான அஷ்ரப் தற்போது ‘போட்டோகிராபர்’ என்ற படத்தில் நாயகனாக நடித்திருப்பதோடு, அவரே படத்தை இயக்கவும் செய்துள்ளார். இவருக்கு ஜோடியாக ஜனனி சுவாமிநாதன் நடித்துள்ளார்.

கருணாகரன், ஆடுகளம் நரேன், “உறியடி” சிவா, தேவி மகேஷ், ஜே.பி. ஜெய், வேலா ராமமூர்த்தி, நிழல்கள் ரவி மற்றும் வெற்றிவேல் ராஜா நடித்துள்ளனர். ராஜ்குமார் சந்திரசேகன் இசை அமைத்துள்ளார். ஏபிஎஸ் என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் எஸ். அப்துல் பாசித் தயாரித்துள்ளார்.

இந்தப் படம் கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

புகைப்படக் கலைஞரான அஷ்ரப், யாருடைய கண்களுக்கும் புலப்படாத, தங்க மரத்தை தேடி கொடைக்கானல் பகுதிக்குச் செல்ல திட்டமிடுகிறார். ஆனால், வழி தெரியாமல் திசைமாறி, அமானுஷ்யங்கள் நிறைந்த அடர்ந்த காட்டுக்குள் சிக்கிக்கொள்ளும் அவர், அங்கிருக்கும் மர்மங்களை எதிர்கொண்டு எவ்வாறு வெளியே வருகிறார் என்பதே படத்தின் மையக்கரு.

ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு

உளவியல் சார்ந்த சர்வைவல் திரில்லர் பாணியில் எடுக்கப்பட்டுள்ள ‘போட்டோகிராபர்’ படம், செப்டம்பர் 25 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here