மாலை நேரத்தில் தானமாக கொடுக்க கூடாத பொருட்கள்

தானம் கொடுக்கும் நேரமானது மாலை நேரமாக இருக்க கூடாது. மாலை நேரத்தில் சில பொருட்களை தானம் வழங்க கூடாது என்று ஆன்மிகத்தில் கூறப்படுகிறது. அவை என்னென்ன பொருட்கள் என்று அறிந்து கொள்வோம்.

சூரியன் மறைந்த பிறகு நாம் கொடுக்கும் பொருட்களில் சில பொருட்களை தானமாக கொடுத்தால் லட்சுமி தேவி கோபம் அடைவாள் என்று ஆன்மிகத்தில் கூறப்படுகிறது. லட்சுமி தேவி கோபம் அடைந்தாள் வீட்டில் வறுமை நிலை ஏற்படும். எவ்வளவு தான் பணம் சம்பாதித்தாலும் அதனை சேமிக்க முடியாது.

பணம் அல்லது தங்கம்

நீங்கள் பணம் அல்லது தங்கத்தை மற்றவர்களுக்கு பொழுது போன நேரத்தில் தானமாக கொடுப்பதன் மூலம், உங்கள் வீட்டில் செல்வ நிலையானது குறியும் என்று ஆன்மிகத்தில் கூறப்படுகிறது. அதனால் இந்த பொருட்களை தானமாக வழங்க கூடாது.

அரிசி/ தானிய வகை: 

சூரியன் மறையும் நேரத்தில் யாராவது வந்து அரிசி அல்லது தானிய வகைகளில் ஏதவாது ஒன்றை கேட்டால் கொடுத்து விடாதீர்கள். ஏனென்றால் இதனை நீங்கள் கொடுப்பதன் மூலம் உங்களிடம் பணவரவு காணப்படாது.

மசாலா பொருட்கள்:

நீங்கள் மசாலா பொருட்களை மற்றவர்களுக்கு தானமாக கொடுப்பதன் மூலம் உங்கள் வீட்டில் உள்ள அமைதி ஆனது சீர் குழைந்து போகிவிடும். அதனால் நீங்கள் மசாலா பொருட்களை மாலை நேரத்தில் தானமாக கொடுத்து விடாதீர்கள்.

எண்ணெய் பொருட்கள்:

நீங்கள் எண்ணெய் பொருட்களை மற்றவர்களுக்கு தானமாக கொடுப்பதன் மூலம், உங்களின் உறவுகளில் நல்லுறவு பராமரிக்கப்படாது. அதனால் உங்களிடம் யாரேனும் எண்ணெய் பொருட்கள் வந்து கேட்டால் அவர்களுக்கு கொடுப்பதை தவிர்த்து விடவும்.

உப்பு:

உப்பு ஆன்மிகத்தில் மகாலட்சுமியின் உருவமாக பார்க்கப்படுகிறது. அதனால் தான் இந்த குறையாமல் பார்க்க வேண்டும் என்று ஆன்மிகத்தில் கூறுவார்கள். அப்படி இருக்கையில் நீங்கள் உப்புவை பொழுது போல நேரத்தில் தானமாக கொடுப்பதன் மூலம் குடும்பத்தில் உள்ளவர்களிடம் சண்டை ஏற்படும். உறவுகளுக்கிடையே நல்லுறவை பராமரிக்கப்படாது.

ஏன் மாலை நேரத்தில் கொடுக்க கூடாது:

ஆன்மிகத்தில் மேல் கூறியுள்ள பொருட்களை  தானமாக கொடுப்பதன் மூலம் வீட்டில் உள்ள செல்வ நிலையானது குறைய ஆரம்பிக்கும். மேலும் வீட்டில் உள்ள அமைதி நிலையானது குறைய ஆரம்பிக்கும். வீட்டில் உள்ள நேர்மறை ஆற்றல் நீங்கி எதிர்மறை ஆற்றல் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. இது போன்ற காரணங்களினால் தான்  மாலை நேரத்தில் பணம், உப்பு, மசாலா பொருட்கள் போன்றவற்றை கொடுக்க கூடாது என்று கூறியுள்ளார்கள்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here