நெகிரி செம்பிலான் முன்னாள் எக்சோ உறுப்பினர்கள் அதிகாரப்பூர்வ வாகனங்களை உடனே ஒப்படைக்க உத்தரவு!

கோலாலம்பூர்:

நெகிரி செம்பிலான் முன்னாள் எக்சோ உறுப்பினர்கள் அதிகாரப்பூர்வ வாகனங்களை உடனே ஒப்படைக்க உத்தரவு!

கோலாலம்பூர், செப்டம்பர் 28: நெகிரி செம்பிலான் Yang di-Pertuan Besar துவாங்கு மூஹ்ரிஸ் துவாங்கு முனாவிர் அவர்களால் நியமனம் ரத்து செய்யப்பட்ட பத்து முன்னாள் மாநிலச் செயல்வைக் குழு உறுப்பினர்களும் தங்களின் அதிகாரப்பூர்வ வாகனங்களை உடனடியாகத் திருப்பிக் கொடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளனர்.

மாநிலச் செயலாளர் அலுவலகத்திலிருந்து தமக்குக் கடிதம் வந்துள்ளதாகத் தொழில்துறை, தொழில்நுட்பம், புத்தாக்கம் மற்றும் டிஜிட்டல் முன்னாள் எக்சோ டத்தோ முகமட் அஸ்னா அமின் தெரிவித்தார்.

விசுவாசப் பிரமாணத்தை மீறியதாகக் கூறி கடந்த செப்டம்பர் 20-ஆம் தேதி எக்சோக்களின் நியமனம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, Wisma Negeri-ல் உள்ள அலுவலகத்திற்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் தங்களது சட்டமன்றத் தொகுதி சேவை மையங்கள் வாயிலாகப் பணிகளைத் தொடர்வதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், டிசம்பர் மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள மாநில வரவுசெலவுத் திட்டம் மற்றும் நிலவிவரும் அரசியல் நிலவரம் குறித்துக் கோலாலம்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக டத்தோ முகமட் அஸ்னா மேலும் தெரிவித்தார்.

இதனிடையே, பொதுமக்கள் நலனுக்கே எப்போதும் முன்னுரிமை வழங்கப்படும் என அவர் உறுதியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here