மத்திய பிரதேசத்தில் 600 ஆண்டுகள் பழமையான மசூதியை இடிக்க முயற்சி …

போபால், மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் நடைபெறவுள்ள கும்பமேளா விழா விற்கான சாலை விரிவாக்கப்பணி களின் ஒரு பகுதியாக, வரலாற்றுச் சிறப்புமிக்க 600 ஆண்டு பழமையான ஷாஹி மசூதியை இடிக்க முயன்ற அதிகாரிகளை எதிர்த்துப் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் மீது கற்கள் வீசப் பட்டதால் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டுத் தடியடி நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்

தியுள்ளது.

சிம் ராஸ்தா கும்பமேளா

மத்தியப்பிரதேசத்தில் முதல்-மந்திரி மோகன் யாதவ் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், வரும் 2028 ஆம் ஆண்டில் உஜ்ஜைனில் உள்ள ஷிப்ரா நதிக்கரையில் சிம் ராஸ்தா கும்பமேளா நடை பெறவுள்ளது. இதையொட்டி இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக சாலைகளை அகலப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடை பெற்று வருகின்றன.

ஷாஹி மசூதி

இந்த விரிவாக்க பணிகளுக்காக உஜ்ஜைனில் உள்ள பல்வேறு வழிபாட்டு தலங்கள் மற்றும் கட்டடங்கள் உள்ளிட்ட 272 கட்டுமானங்களை அகற்ற திட்டமிடப்பட்டு உள்ளது. இதில் உஜ்ஜைனில் உள்ள 600 ஆண்டுகள் பழமையான ஷாஹி மசூதியின் ஒரு பகுதியும் அடங்கும். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் நேற்று இரவு முதலே போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மசூதியை இடிக்காமல் அதற்கு எதிரே உள்ள கட்டடங்களை அகற்றிச்சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால் அப்பகுதியில் கடுமையான பதற்றம் நிலவியதுடன், ஏராளமான காவலர்களும் குவிக்கப்பட்டனர்.

போராட்டம்

இந்நிலையில், இன்று காலை மசூதியின் ஒரு பகுதியை இடிப்பதற்காக அதிகாரிகள் வந்தபோது, அங்கு திரண்ட பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்வீச்சுத்தாக்குதல்

அப்போது எதிர்பாராத விதமாக போலீசார் மீது கல்வீச்சுத்தாக்குதல் நடத்தப்பட்டது. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர போலீசார் தற்காப்புக்காக கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், லேசான தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை கலைத்தனர். அசம்பாவிதங்களை தவிர்க்க அப்பகுதியில் விரைவு படையினரும் குவிக்கப்பட்டுள்ளதால் உஜ் ஜைன் நகரில் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here