AI நாடாக உருவெடுக்கும் மலேசியா – இலக்கவியல் முதலீடுகளை பொருளாதார வாய்ப்புகளாக மாற்ற MDEC தீவிர முயற்சி

2030-ஆம் ஆண்டுக்குள் மலேசியாவை நிலையான AI நாடாக உருவாக்கும் இலக்கை நோக்கி, நாட்டின் இலக்கவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் துறை முதலீடுகள், மலேசிய நிறுவனங்களின் வளர்ச்சி, உயர்மதிப்புள்ள வேலைவாய்ப்புகள், உள்நாட்டு புத்தாக்கம் மற்றும் பரந்த பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவதை உறுதி செய்வதில் மலேசிய இலக்கவியல் பொருளாதாரக் கழகம் (MDEC) தனது முயற்சிகளை வலுப்படுத்தி வருகிறது.MDEC ஏற்பாட்டில் நடைபெற்ற MDX Forum 2026, உலகளாவிய முதலீட்டாளர்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள், மாநில அமைப்புகள் மற்றும் மலேசிய நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 300 பிரதிநிதிகளை ஒன்றிணைத்தது.

மலேசியாவின் அடுத்தகட்ட இலக்கவியல் வளர்ச்சியில், ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள வலுவான அடித்தளங்களையும் முதலீடுகளையும் எவ்வாறு உறுதியான பொருளாதார மதிப்பாக மாற்றுவது என்பது இம்மன்றத்தின் முக்கிய நோக்கமாக அமைந்தது.AI Nation 2030 முதலீடுகள் மக்களுக்கான வாய்ப்புகளாக மாற வேண்டும். இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கூறுகையில், மலேசியாவின் அடுத்தகட்ட இலக்கவியல் வளர்ச்சி, நாட்டின் வலுவான அடித்தளத்தை உறுதியான பொருளாதார மதிப்பாக மாற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

2030-ஆம் ஆண்டுக்குள் நிலையான AI நாடாக உருவெடுப்பதற்கான தெளிவான திசையை மலேசியா நிர்ணயித்துள்ளது. AI மற்றும் இலக்கவியல் உள்கட்டமைப்பில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள், வலுவான மலேசிய நிறுவனங்கள், உயர்மதிப்புள்ள வேலைவாய்ப்புகள் மற்றும் அதிகமான உள்நாட்டு புத்தாக்கங்களை உருவாக்குவதை உறுதி செய்வதே அடுத்தகட்ட நடவடிக்கையாகும் என்று அவர் தெரிவித்தார்.தேவையான அடித்தளங்களை அரசாங்கம் ஏற்படுத்த முடியும் என்றாலும், அவற்றை வர்த்தக ரீதியாகச் செயல்படக்கூடிய தயாரிப்புகள், சேவைகள் மற்றும் தீர்வுகளாக தொழில்துறை மாற்றும்போதுதான் உண்மையான பொருளாதார தாக்கம் உருவாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தத் திசை Malaysia Digital 2030 (MD2030) மூலம் வழிநடத்தப்படுகிறது. இது AI Nation 2030 நோக்கிய மலேசியாவின் செயலாக்கப் பாதையை வகுப்பதுடன், தொழில்நுட்பத்தைப் பெரும்பாலும் பயன்படுத்தும் நாடு என்ற நிலையிலிருந்து, அதிகமான உள்நாட்டு புத்தாக்கங்களை உருவாக்கி, வர்த்தகமயமாக்கி, விரிவுபடுத்தும் நாடாக மலேசியா முன்னேறுவதையும் குறிக்கிறது.இந்த முயற்சியில், தேசியக் கொள்கைக்கும் பொருளாதார வாய்ப்புகளுக்கும் இடையிலான இணைப்பாக MDEC செயல்படுகிறது. நிறுவனங்களை வர்த்தகமயமாக்கல், முதலீடு, திறனாளர்கள் மற்றும் சந்தைகளுடன் இணைப்பதிலும் MDEC பங்காற்றுகிறது.

AI பயன்பாட்டிலிருந்து AI பொருளாதாரத்தை உருவாக்கும் அடுத்தகட்ட பயணம். MDEC தலைவர் கணேஷ் குமார் பங்கா கூறுகையில், AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் மட்டும் கவனம் செலுத்தாமல், அளவிடக்கூடிய மற்றும் நீடித்த மதிப்பை உருவாக்கும் AI பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது அவசியம் என்றார். “மலேசியாவின் AI வாய்ப்பு என்பது இனி AI-ஐ ஏற்றுக்கொள்வது மட்டுமல்ல. அதனைச் சுற்றி ஓர் AI பொருளாதாரத்தை உருவாக்குவதாகும்,” என்று அவர் தெரிவித்தார்.AI மூலம் நிறுவனங்களின் உற்பத்தித்திறனை அதிகரிப்பது, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வளர்ச்சியடைய உதவுவது, மலேசிய தயாரிப்புகள் மற்றும் சேவைகளை உருவாக்குவது மற்றும் மக்களுக்கு உயர்மதிப்புள்ள வாய்ப்புகளை ஏற்படுத்துவது முக்கியம் என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கு AI-ஐ உருவாக்கும் நிறுவனங்கள், அதைப் பயன்படுத்தும் வணிகங்கள், அதனுடன் பணியாற்றக்கூடிய திறனாளர்கள், முதலீடு செய்யத் தயாராக உள்ள முதலீட்டாளர்கள் மற்றும் மலேசிய தீர்வுகள் வளரக்கூடிய சந்தைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய சூழல் அவசியம் என்றும் அவர் கூறினார்.உலகளாவிய முதலீடுகளை மலேசிய நிறுவனங்களுடன் இணைக்கும் MDEC. மலேசியாவின் இலக்கவியல் பொருளாதாரத்திற்கான சிறப்பு முதலீட்டு ஊக்குவிப்பு நிறுவனமாக, முதலீட்டாளர்களின் முழுப் பயணத்திலும் MDEC பங்காற்றுகிறது.

மலேசியாவை இலக்கவியல் நிறுவனங்களுக்கான முதலீட்டு இடமாக நிலைநிறுத்துவது முதல், நிறுவனங்கள் நாட்டில் தங்கள் செயல்பாடுகளை நிறுவி, வளர்த்து, விரிவுபடுத்துவது வரை MDEC ஆதரவு வழங்குகிறது.அத்துடன், உலகளாவிய முதலீடுகளை மலேசிய நிறுவனங்கள், உள்ளூர் திறனாளர்கள் மற்றும் பரந்த ஆசியான் சந்தையுடன் இணைப்பதிலும் MDEC செயல்படுகிறது.2026-ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டு வரை 7,000-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு Malaysia Digital Status வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் 4,400-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் செயல்பாட்டில் உள்ளன. 2026-ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் அங்கீகரிக்கப்பட்ட 119 நிறுவனங்களில் 44 நிறுவனங்கள் முதன்மையாக செயற்கை நுண்ணறிவுத் துறையில் ஈடுபட்டுள்ளன. AI, Data Centre and Cloud மற்றும் Global Business Services ஆகிய துறைகள் இணைந்து புதிய அங்கீகாரங்களில் ஏறக்குறைய 70 விழுக்காட்டைப் பதிவு செய்துள்ளன.

இந்த 119 நிறுவனங்கள் தங்களது முதல் ஐந்து ஆண்டுகளில் RM133.6 பில்லியன் முதலீட்டையும் 4,922 வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. MDX Forum 2026-இன் போது மேலும் 12 நிறுவனங்களுக்கு Malaysia Digital Status அங்கீகாரம் வழங்கப்பட்டது. இந்த நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு, Data Centre & Cloud, Internet of Things (IoT), Fintech மற்றும் Creative Media Technology உள்ளிட்ட பல்வேறு இலக்கவியல் துறைகளைச் சேர்ந்தவையாகும்.

அவை ஜொகூர், கெடா, மலாக்கா, பேராக், பினாங்கு, புத்ராஜெயா, சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் அமைந்துள்ளன. மலேசிய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. முதலீடு வந்த பிறகு உருவாக்கப்படும் மதிப்பே முக்கியம். மலேசிய நிறுவனங்களை வலுப்படுத்துவது, திறன்மிக்க மனிதவளத்தை உருவாக்குவது, புதிய தேவைகளை ஏற்படுத்துவது மற்றும் மாநிலங்கள் முழுவதும் புதிய வாய்ப்புகளைத் திறப்பதன் மூலம் ஆரம்ப முதலீட்டிற்கு அப்பாற்பட்டு நீடித்த மதிப்பு உருவாக வேண்டும். அதிகமான முதலீடுகளை ஈர்ப்பது மட்டுமே MDEC- ன் கவனம் அல்ல. அந்த முதலீடுகளை மலேசியாவின் பரந்த இலக்கவியல் சூழலுடன் இணைத்து, அதிகமான நிறுவனங்களும் சமூகங்களும் AI பொருளாதாரத்தில் பங்கேற்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதே MDEC- ன் நோக்கம்

இலக்கவியல் முதலீட்டு வாய்ப்புகளை வலுப்படுத்துவது, நிறுவனங்கள் மலேசியாவில் தங்கள் செயல்பாடுகளை நிறுவவும் விரிவுபடுத்தவும் உதவுவது, உலகளாவிய முதலீடுகளை மலேசிய நிறுவனங்கள் மற்றும் திறனாளர்களுடன் இணைப்பது மற்றும் AI பொருளாதாரம் உருவாக்கும் வாய்ப்புகளில் அதிகமான உள்ளூர் நிறுவனங்கள் பங்கேற்பதற்கு வழிவகுப்பது என AI Nation 2030 நோக்கிய MDEC-இன் தொடர்ச்சியான முயற்சி. இதன் மூலம், Malaysia Digital 2030 வழியாக AI Nation 2030 நோக்கிய மலேசியாவின் அடுத்தகட்ட இலக்கவியல் வளர்ச்சியை பொருளாதார மதிப்பாக மாற்றும் முயற்சியில் MDEC தனது பங்கைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here