நேஷன்ஸ் லீக் கால்பந்து: ஸ்பெய்னுக்கு ‘ஹாட்ரிக்’ வெற்றி

நேஷன்ஸ் லீக் கால்பந்துப் போட்டியில் ஸ்பெய்ன் 3-1 கோல் கணக்கில் செக் குடியரசை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது. ஸ்பெய்னின் ஓவிடோ நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், முதலில் ஸ்பெய்ன் அணிக்காக அதன் இளம் நட்சத்திர வீரர் லாமின் யமால் 6ஆவது நிமிடத்தில் கோல் அடித்தார். தொடர்ந்து 35ஆவது நிமிடத்தில் ரோட்ரி ஸ்கோர் செய்ய, முதல் பாதியை ஸ்பெய்ன் 2-0 முன்னிலையுடன் நிறைவு செய்தது. 2ஆவது பாதியில் செக் குடியரசுக்காக ஜிரி ஸ்லாமா 69ஆவது நிமிடத்தில் கோல் அடித்தார்.

இந்நிலையில், 85ஆவது நிமிடத்தில் செக் குடியரசு வீரர் லாடிஸ்லாவ் கிரெஜ்சி 2ஆவது மஞ்ங்ள் அட்டை பெற்று, ஆட்டத்திலிருந்து வெளியேறினார். இது ஸ்பெய்னுக்கு சாதகமாக 89ஆவது நிமிடத்தில் அந்த அணிக்காக மிகேல் மெரினோ கோல் அடித்தார். முடிவில் ஸ்பெய்ன் 3-1 கோல் கணக்கில் வென்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here