பினாங்கு பொதுப் போக்குவரத்தில் புதிய சகாப்தம்: இரு புதிய மின்சாரப் பேருந்துகளை நாளை முதல் சோதனை ஓட்டம் செய்கிறது ‘ராபிட் பினாங்கு’!

கோலாலம்பூர்:

பினாங்கு மாநிலத்தின் சாலை நிலைமைகள் மற்றும் குறிப்பிட்ட பயணப் பாதைகளுக்கு ஏற்றவாறு மின்சாரப் பேருந்துகள் செயல்படுகிறதா என்பதைக் கண்டறிய, இரு வேறு தயாரிப்பு நிறுவனங்களின் மின்சாரப் பேருந்துகளை நாளை (அக்டோபர் 6) முதல் ‘ராபிட் பினாங்கு’ சோதனை ஓட்டம் செய்யவுள்ளது.

நாளை மற்றும் நாளை மறுநாள் (அக்டோபர் 6, 7) நடைபெறும் இந்த இரண்டு நாள் சோதனை ஓட்டத்தில், 12 மீட்டர் நீளமுள்ள ‘Foton’ மின்சாரப் பேருந்தும், 8.25 மீட்டர் நீளமுள்ள ‘கோல்டன் டிராகன்’ மின்சாரப் பேருந்தும் தேர்வு செய்யப்பட்டப் பாதைகளில் தனித்தனியாகச் சோதிக்கப்படவுள்ளன.

“மின்சாரப் பேருந்துகளைத் தற்போதைய பாதைகளில் முறைப்படி அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக, அவற்றின் உண்மையான திறன் மற்றும் செயல்பாட்டுத் தரவுகளைப் பெறுவதற்கு இந்தச் சோதனை ஓட்டம் மிக முக்கியமானது. மின்சாரப் பயன்பாடு, சார்ஜிங் வேகம், பயணிகளின் பாதுகாப்பு மற்றும் சௌகரியம் ஆகியவை இதில் தீவிரமாக மதிப்பிடப்படும்” என்று ஷாஹ்ருல் அஸ்மிர் அகமட் சாக்கி கூறினார்.

மின்சாரப் பேருந்துகளின் வருகையை முன்னிட்டு, சார்ஜிங் மையங்கள் அமைத்தல், பராமரிப்பு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் ஊழியர்களுக்கான பயிற்சிகளை வழங்குதல் போன்ற ஆயத்தப் பணிகளில் ராபிட் பினாங்கு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

முதல் கட்டமாக 75 மின்சாரப் பேருந்துகளைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மார்ச் 2027-க்குள் அவை கட்டம் கட்டமாகச் சேவையில் சேர்க்கப்படும். பினாங்கு மாநிலப் பேருந்து மாற்றத் திட்டத்தின் கீழ் ஒட்டுமொத்தமாக 240 புதிய மின்சாரப் பேருந்துகளும், 70 புதிய டீசல் பேருந்துகளும் சேவையில் இணைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here