ஹனிஃபா அமான் செனட்டராக நியமனமா?

பார்ட்டி சிந்தா சபா (PCS) தலைவர் ஹனிஃபா அமான் செனட்டராக நியமிக்கப்படுவார் என்று ஒரு வட்டாரம் எஃப்எம்டியிடம் தெரிவித்துள்ளது. அவர் திங்கள்கிழமை பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அம்னோவின் நீண்டகால உறுப்பினரான அனிஃபா, கிமானிஸுக்கு நான்கு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். பாரிசான் நேஷனல் அதிகாரத்தை இழந்த பிறகு 2018 செப்டம்பரில் அம்னோவை விட்டு வெளியேறி 2020 இல் PCS தலைவராக ஆனார். ஜனவரியில், முன்னாள் வெளியுறவு அமைச்சர் சபா முதல்வர் ஹாஜிஜி நூரின் அனைத்துலக உறவுகள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பான சிறப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

கடந்த ஆண்டு நவம்பரில் 15ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, ஹனிஃபா வெளிப்படையாக அன்வார் இப்ராஹிமை பிரதமராக ஆதரித்தார். அந்த காலகட்டத்தில், சபாவில் பக்காத்தான் ஹராப்பானின் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஹனிஃபாவின் ஆதரவு பெரும் ஊக்கமாக இருந்தது என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here