மலேசியாவில் மீண்டும் தலைதூக்கிய புகைமூட்டம்: 8 முக்கியப் பகுதிகளில் காற்றின் தரம் ‘ஆரோக்கியமற்ற’ நிலைக்குச் சரிவு!

கோலாலம்பூர்:

மலேசியாவில் இன்று காலை முதலே நாட்டின் பல்வேறு பகுதிகளில் அடர்ந்த புகைமூட்டம் காணப்பட்டதைத் தொடர்ந்து, 8 முக்கியப் பகுதிகளில் காற்றின் தரம் ‘ஆரோக்கியமற்ற’ நிலையை எட்டியுள்ளதாக சுற்றுச்சூழல் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக ஜோகூர் மாநிலம் மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிகளில் காற்று மாசுப் பதிவு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

“காற்று மாசு குறியீடு (API) 0 முதல் 50 வரை இருந்தால் நல்ல நிலையையும், 51 முதல் 100 வரை மிதமான நிலையையும் குறிக்கும். ஆனால் தற்போது 101 முதல் 200 வரையிலான ‘ஆரோக்கியமற்ற’ நிலையை 8 இடங்கள் எட்டியுள்ளன. நாடு முழுவதும் உள்ள பிற 59 பகுதிகளில் காற்றின் தரம் இன்னும் மிதமான நிலையிலேயே நீடிக்கிறது” என்று, சுற்றுச்சூழல் மற்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜோகூர் மாநிலத்தில் பாசீர் கூடாங், பத்து பஹாட், லார்க்கின் மற்றும் சிகாமாட் ஆகிய நான்கு முக்கிய இடங்கள் ஆரோக்கியமற்ற காற்று மாசுப் பதிவைப் பதிவு செய்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here