கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விரைந்து மீட்பது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மிகவும் இன்றியமையாததாகும்.
இருநாட்டு மீனவர்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்
இத்தகைய சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறுவது, இரு நாடுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தைக்கான தற்போதைய அதிகாரப்பூர்வ அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது. இதற்கென அமைக்கப்பட்டுள்ள மீன்பிடி விவகாரங்கள் தொடர்பான இந்தியா-இலங்கை கூட்டுப் பணிக்குழுவை (India-Sri Lanka Joint Working Group on Fisheries) உரிய முறையில் புனரமைத்து, அதன் கூட்டத்தை விரைவாகக் கூட்டி, இருநாட்டு மீனவர்களின் பிரச்சனைகளுக்கு ஆக்கப்பூர்வமான தீர்வுகளைக் காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விரைவாக விடுதலை செய்ய வேண்டும்
எனவே, இவ்விவகாரத்தை இலங்கை அரசிடம் உடனடியாகக் கொண்டு சென்று, தற்போது இலங்கையில் காவலில் வைக்கப்பட்டுள்ள 20 தமிழ்நாட்டு மீனவர்களை விரைவாக விடுதலை செய்து தாயகம் அழைத்து வரவும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள 270 மீன்பிடிப் படகுகளை மீட்டுத் தரவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.