அமாவாசையில் காகத்திற்கு ஏன் உணவு வைக்க வேண்டும்?

அமாவாசை விரதம் என்றாலே முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது, முன்னோர்களுக்கு படையல் இட்டு வழிபடுவது, காகத்திற்கு உணவு வைப்பது, தானம் அளிப்பது, மாலையில் முன்னோர்களுக்காக விளக்கேற்றி வழிபடுவது ஆகியவை அவசியம் செய்ய வேண்டிய விஷயங்களாக சொல்லப்படுகின்றன. அதில் தர்ப்பணம், தானத்திற்கு அடுத்த படியாக, மிக முக்கியமான காரியமாக சொல்லப்படுவது, காகத்திற்கு உணவு வைப்பது ஆகும்.

பெரும்பாலானவர்கள் அமாவாசை அன்று வீட்டில் விரதத்திற்காக சமைத்த சாதம், சாம்பார், கூட்டு, பொரியல் போன்ற உணவையே காகத்திற்கு படைப்பதை வழக்கமாக வைத்துள்ளார்கள். ஆனால் இப்படி உணவு வைப்பதற்கு பதிலாக ஒரு குறிப்பிட்ட எளிய உணவை காகத்திற்கு படைப்பது இன்னும் பல மடங்கு அதிகமான பலனையும், நம்முடைய பல தலைமுறை சாபத்தை தீர்க்கும் என சொல்லப்படுகிறது.காகத்தின் வடிவத்தில் நமது முன்னோர்கள் வந்து நாம் வைக்கும் உணவை ஏற்றுக்கொள்வதாக ஐதீகம். அமாவாசை நாள் முன்னோர்களுக்குரிய சிறப்பு நாளாகக் கருதப்படுவதால் அன்றைய தினம் காகத்திற்கு உணவு வைப்பது கட்டாயமாக கடைபிடிக்கப்படுகிறது. அமாவாசை போன்ற நாட்களில் காகத்திற்கு உணவு அளிப்பதன் மூலம் முன்னோர்களின் ஆசி கிடைப்பதுடன், ஜாதகத்தில் உள்ள பித்ரு தோஷம் நீங்கும் என்று நம்பப்படுகிறது.

– காகம் சனீஸ்வர பகவானின் வாகனமாகக் கருதப்படுகிறது. காகத்திற்கு உணவு வைப்பதன் மூலம் சனி பகவானின் அருளையும் பெறலாம்.

– புதிதாக வடித்த சாதம்

– சிறிதளவு கருப்பு எள்

– சுத்தமான பசு நெய்

– சிறிதளவு நாட்டுச் சர்க்கரை அல்லது வெல்லம்

மேலே குறிப்பிடப்பட்ட நான்கு பொருட்களையும் ஒன்றாகக் கலந்து, உருண்டையாகப் பிசைந்து கொள்ள வேண்டும்.

– மகாளய அமாவாசை அன்று பகல் 11.30 முதல் 12.30 மணிக்குள் காகத்திற்கு உணவு வைக்க வேண்டும்.

– மொட்டை மாடி அல்லது வீட்டின் வெளிப்புறத்தில், சுத்தமான இடத்தில் மட்டுமே காகத்திற்கு உணவு வைக்க வேண்டும்.

– காகத்திற்கு உணவு வைக்கும் போது உங்கள் முன்னோர்களை மனதார நினைத்து, அவர்களின் ஆசி வேண்டி கேட்டபடி வைக்க வேண்டும்.

– மகாளய அமாவாசை அன்று காகம் இந்த உணவை எடுத்துக் கொள்வதால் பித்ருக்கள் மனம் மகிழ்ந்து, திருப்தி அடைவார்கள்.குடும்பத்தில் உள்ள தடைகள், திருமண தாமதம், பணக் கஷ்டம் ஆகியவை நீங்கி, குலம் தழைக்கும்.

மகாளய அமாவாசை அன்று முன்னோர்களின் ஆசி பெற “ஓம் சர்வ பிண்ட ரட்சகம் பரிபூரண பித்ரு அனுக்கிரகம் நமோ நமஹ” என்ற மந்திரத்தைச் சொல்லலாம். முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிக்கும் போது, தானம் அளிக்கும் போது, காகத்திற்கு உணவு வைக்கும் போது இந்த மந்திரத்தை சொல்லுவது மிகவும் சிறப்புக்குரியதாகும். அமாவாசை நாளில் காகத்திற்கு உணவு வைத்துவிட்டு, சூரியனைப் பார்த்துக் கைகளில் தர்பம் ஏந்தி முன்னோர்களை மனதார நினைத்து இந்த மந்திரத்தைச் ஜபிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here