ஷாப்பிங் மாலில் உள்ளூர் பெண் ஒருவரை வெளிநாட்டவர் பாலியல் வன்புணர்வு செய்ததாகக் குற்றச்சாட்டு

கோலாலம்பூர்: நகரில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலில், உள்ளூர் பெண் ஒருவர் வெளிநாட்டவர் ஒருவரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. 20 வயதுகளில் உள்ள அப்பெண் தனது காதலருடன் நெருக்கமாக இருந்ததைத் தொடர்ந்து, சனிக்கிழமை (அக்டோபர் 10) மாலை சுமார் 7 மணியளவில் இச்சம்பவம் நடந்ததாக நம்பப்படுகிறது. வங்காளதேசத்தைச் சேர்ந்தவர் என்று கருதப்படும் சந்தேக நபர், அந்த ஜோடியை ரகசியமாகப் படம் பிடித்ததாகவும், பின்னர் அப்பெண் தனது கோரிக்கைகளுக்கு இணங்க மறுத்தால் அந்தப் பதிவை வெளியிடுவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

அதன்பின், பாதிக்கப்பட்ட பெண்ணின் காதலனை அங்கிருந்து வெளியேறும்படி பணித்த சந்தேக நபர், அப்பெண்ணை அங்கேயே பாலியல் வன்புணர்வு செய்ததாகத் தெரியவருகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அந்தச் சந்தேக நபரை முன்பின் தெரியாது என்றும், அவரை இதற்கு முன் பார்த்ததே இல்லை என்றும் நம்பப்படுகிறது. காவல்துறையினர் தற்போது சந்தேக நபரைத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினரின் கருத்தைப் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here