வீடுபுகுந்து திருட முயன்ற சம்பவம் குறித்து வைரலான காணொளி; போலீசார் விசாரணை

கோத்தா திங்கி: கோத்தா திங்கிக்கு அருகிலுள்ள ஃபெல்டா லோக் செலாத்தானில், வீடுபுகுந்து திருட முயன்ற சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்தச் சம்பவத்தின் காணொளி, ‘ஓராங் கோத்தா திங்கி’  எனும் முகநூல் கணக்கு உரிமையாளரால் பதிவேற்றப்பட்டதாக கோத்தா திங்கி மாவட்ட காவல் தலைவர்  கண்காணிப்பாளர் யூசோஃப் ஒத்மான் தெரிவித்தார்.

திங்கள்கிழமை (அக்டோபர் 19) பிற்பகல் 3 மணிக்கு, முகநூல் பக்கத்தில் வைரலான இந்தக் காணொளியைக் கண்டறிந்தோம் என்று அவர் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார். இந்தச் சம்பவம் குறித்து, தண்டனைச் சட்டத்தின்பிரிவு 453, பிரிவு 511இன் கீழ் விசாரணை நடைபெற்று வருவதாக கண்காணிப்பாளர் யூசோஃப் தெரிவித்தார். தற்போது நடைபெற்று வரும் விசாரணையைப் பாதிக்கக்கூடும் என்பதால், இது குறித்து பொது மக்கள் யூகங்களை வெளியிடவோ அல்லது கருத்துகளைத் தெரிவிக்கவோ வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here