மலையாளத்தில் ‘ஆவேஷம்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற சஜின் கோபு, நடிகை நிகிலா விமல் இணைந்து நடித்துள்ள படம் ‘தூமாகேது’. இப்படத்தை ‘நெய்மர்’ படத்தை இயக்கிய சுதி மேடிசன் இயக்கியுள்ளார். ஷைன் டாம் சாக்கோ, சித்தார்த் பரதன், கணபதி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டைம் டிராவல் கதையை மையமாகக் கொண்ட நகைச்சுவை கலந்த திரில்லர் படமாக இது உருவாகியுள்ளது.
டைம் டிராவலில் சிக்கும் நாயகன்
திருமண நாளில் நடைபெறும் விசித்திரமான சம்பவங்களே படத்தின் கதைக்களமாக அமைந்துள்ளன. குட்டன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள சஜின் கோபு, திருமணத்துக்குப் பிறகு ஒரே நாளில் மீண்டும் மீண்டும் சிக்கிக்கொள்ளும் சூழலை எதிர்கொள்கிறார். அந்தச் சுழற்சியில் இருந்து அவர் எவ்வாறு மீள்கிறார் என்பதுடன் மர்மம், நகைச்சுவை, திரில்லர் அம்சங்களும் கதையில் இடம்பெற்றுள்ளன.
நெட்பிளிக்ஸில் வெளியாகிறது
இந்த நிலையில், ‘தூமாகேது’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ‘தூமாகேது’ திரைப்படம் அக்டோபர் 23-ந்தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகும் எனத் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஓடிடி காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.






















