பல் இன மக்கள் வாழும் இத்திருநாட்டில் அனைவரும் சகோதரத்துவத்துடன் திருநாட்களை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இன்னும் சில தினங்களில் இந்தியர்கள் தீபாவளி திருநாளைக் கொண்டாடவிருக்கின்றனர்.
தீபாவளி திருநாள் என்றால் நமக்கு முதலில் நினைவிற்கு வருவது பலகாரங்கள் தான் என்றால் அது மிகையாகாது. இந்தத் தீபாவளி திருநாளை மேலும் சிறப்பற செய்யும் வகையில் மைடின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ வீரா டாக்டர் ஹாஜி அமீர் அலி மைடின் இந்தியரின் வீட்டிற்கு சென்று பராம்பரிய பலகாரங்களான முறுக்கு, அச்சு முறுக்கு, நெய் உருண்டை ஆகிவற்றை அக்குடும்பத்தாருடன் இணைந்து தயார் செய்து அவர்களுடன் உண்டு மகிழ்ந்தார்.
70 வயதான இந்திராதேவி, 79 வயதான நாகம்மா ஆகியோர் கூறுகையில் தற்பொழுது இளம் தலைமுறையினர் செய்வதுபோல் அனைத்தும் உடனடி பலகாரமாக இல்லாமல் பராம்பரிய முறைப்படி வீட்டில் அனைத்து பொருட்களையும் தயார் செய்து தீபாவளி பலக்காரங்களை செய்வதாக கூறினர்.
எங்கள் இல்லத்திற்கு மைடின் உரிமையாளரின் வருகை இந்தாண்டு தீபாவளியை மேலும் மெருக்கேற்றி இருக்கிறது. நாங்கள் எங்கள் வீட்டிற்கு தேவையான அனைத்துப் பொருட்களையும் மைடின் பேராங்கடியில்தான் வாங்குவோம். தரமானப் பொருட்களை நியாயமான விலையில் மைடினில் பொருட்கள் விற்கப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தனர்.
டத்தோ வீரா டாக்டர் ஹாஜி அமீர் அலி மைடின் கூறுகையில் சிறுவயதில் எங்கள் கிராமங்களில் அண்டை அயலாருடன் தீபத்திருநாளைக் கொண்டாடி இருக்கிறோம். ஆனால் நீண்ட காலத்திற்கு பிறகு பராம்பரிய முறையில் தீபாவளி பலக்காரங்களை இந்திய இல்லத்தரசிகளுடன் இணைந்து என் கையால் பலகாரங்களை செய்தது மிகவும் மகிழச்சியான தருணமாக அமைந்திருந்தது.
மலேசியாவில் அனைத்து இனத்தவர்களும் தங்கள் ஒற்றுமையை பகிர்ந்து கொள்ள இதுபோன்ற திருநாட்கள் பாலமாக அமைந்திருக்கிறது என்றார். திருமதி இந்திராதேவி இன்று செய்த பலகாரங்கள் அனைத்தும் மிகவும் ருசியாக இருந்தது. இவர்களின் பராம்பரிய பலக்கார வகைகளை இளம் தலைமுறையினர் கண்டிப்பாக கற்று கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.












