ஜோகூர் மாநில இந்தியச் சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் உறுதியாக உள்ளது: மந்திரி பெசார் ஒன் ஹபிஸ்

ஜோகூர் மாநில இந்தியச் சமூகத்தைப் பாதிக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளை, இதற்கென அமைக்கப்பட்ட பிரத்யேக பணிக்குழுவின் மூலம் தொடர்ந்து தீர்த்து வைப்போம் என்று டத்தோ ஒன் ஹபிஸ் காசி தெரிவித்தார். ஆலயம், நிலம் தொடர்பான சிக்கல்கள், மாநிலத்தின் இந்தியச் சமூக விவகாரங்களுக்கான பணிக்குழுவின் தலைவரும் கெமெலா சட்டமன்ற உறுப்பினருமான கே. ரவீன் குமாரின் உதவியுடன் தீர்த்து வைக்கப்படும் என்று ஜோகூர் மந்திரி பெசார் கூறினார்.

தீபாவளியை முன்னிட்டு, மாநிலம் தழுவிய Jualan Kasih Johor திட்டத்திற்காக லட்சக்கணக்கான ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மானிய விலையில் உணவுப் பொருட்கள் வழங்கப்படுவதுடன் தேவைப்படுபவர்களுக்கு உணவுப் பொதிகளும் விநியோகிக்கப்படுகின்றன. முந்தைய கட்டத்தில் உதவி பெறத் தவறியவர்கள் விண்ணப்பித்ததன் பேரில், அவர்களுக்கு  Bantuan Kasih Johor நிதி உதவியையும் சமீபத்தில் வழங்கியுள்ளோம்  என்று ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 1) இரவு  தாமான் தம்போய் இண்டாவில் நடைபெற்ற ‘பங்சா ஜோகூர்’ தீபாவளி கொண்டாட்ட நிகழ்வில் அவர் தெரிவித்தார். இனம், மதம் கடந்து மக்களுக்கு உதவும் தனது கொள்கையை மாநில அரசு தொடர்ந்து முன்னெடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சமீபத்தில் நடைபெற்ற ஜோகூர் மாநிலத் தேர்தலில் நல்ல முடிவுகளைப் பெற்றிருந்தாலும் நாம் தொடர்ந்து மக்களுக்காக உழைக்கவும் சேவை செய்யவும் வேண்டும் என்று அவர் கூறினார். இதற்கு முன்னதாக, தீபாவளி பண்டிகைக்காக உணவுப் பொருட்கள், ஆடைகள், இதர அலங்காரப் பொருட்களை விற்பனை செய்யும் வருடாந்திர தீபாவளிச் சந்தையில் அமைக்கப்பட்டிருந்த சில விற்பனை அரங்குகளையும் ஒன் ஹபிஸ் பார்வையிட்டார். நவம்பர் 7-ஆம் தேதி வரை ஒரு மாதம் நடைபெறும் இந்தச் சந்தையை, ஜோகூர் மாநில ம.இ.கா, ஜோகூர் இந்தியச் சிறு வணிகர் சங்கம் மற்றும் பிற அரசு சாரா அமைப்புகளுடன் இணைந்து, கடந்த 18 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடத்தி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here