எல்லைகளை திறக்க வேண்டும் என்பது என் தனிப்பட்ட கருத்தல்ல – முஹிடின் விளக்கம்

பொந்தியான்: நாட்டின் எல்லையை மீண்டும் திறப்பது குறித்து தேசிய மீட்பு கவுன்சில் (MPN) முன்வைத்த திட்டம் தனிப்பட்ட முடிவு அல்ல. ஆனால் அவை கவுன்சில் உறுப்பினர்களால்  ஒப்புக் கொள்ளப்பட்டது என்று அதன் தலைவர் டான்ஸ்ரீ முகைதின் யாசின் கூறினார்.முன்னாள் பிரதமர் தலைமையில் அண்மையில் இடம்பெற்ற கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரம், குறிப்பாக வணிகம் மற்றும் சுற்றுலாத் துறைகளுக்கு புத்துயிர் அளிக்க எல்லையைத் திறப்பது முக்கியம் என்றும், மார்ச் 1ஆம் தேதிக்குள் நாட்டின் எல்லைகளை மீண்டும் திறப்பதற்கான கவுன்சிலின் முன்மொழிவுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் ஒப்புக்கொள்வார் என்றும் முஹிடின் கூறினார்.  இது MPN இன் முன்மொழிவு, என்னுடையது அல்ல. கூட்டத்தில், சுகாதார அமைச்சர் இருந்தார். கட்டாய தனிமைப்படுத்தல் இருக்குமா என்று கேட்டபோது ​​அவர் தேவையில்லை என்றார்.

எல்லையை எப்போது திறக்க முடியும் என்று கேட்டதற்கு, மார்ச் 1 ஆம் தேதி திறக்க முடியும் என்று அவர் கூறினார் நேற்று இரவு பெரிகாத்தான் நேஷனல் (PN) சீன புத்தாண்டு வரவேற்பு நிகழ்ச்சியில் முகைதின் தனது உரையில் கூறினார்.

மேலும் கெராக்கான் தலைவர் செனட்டர் டத்தோ டோமினிக் லாவ் ஹோ சாய் மற்றும் அனைத்துலக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது அஸ்மின் அலியும் கலந்து கொண்டனர். பிப்ரவரி தொடக்கத்தில், MPN அரசாங்கம் மார்ச் 1 ஆம் தேதிக்குள் நாட்டின் எல்லைகளை முழுமையாக திறக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. ஆனால் அமைச்சரவை இன்னும் இந்த திட்டத்தை விவாதிக்கவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here