விஜய் தேவரகொண்டாவின் “ரணபலி” ஓடிடி ரிலீஸ் எப்போது?…

விஜய் தேவரகொண்டாவின் ‘ரணபலி’ படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ராகுல் சங்கிருதயன் இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்திருந்த ‘ரணபலி’ திரைப்படம் கடந்த அக்டோபர் 16ஆம் தேதி வெளியானது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் டி-சீரிஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அஜய் – அதுல் இசையமைத்துள்ளார்.

இந்தப் படம் திரையரங்குகளில் கலவையான விமர்சனங்களைப் பெற்று, ரூ. 80 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மிகப்பெரிய பட்ஜெட்டில் வரலாற்று பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளது.

1870-களில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தென்னிந்தியாவில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பஞ்சத்தை எதிர்த்து, அதனைத் தட்டிக்கேட்ட நாயகனின் கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது.

ஓடிடி ரிலீஸ் அப்டேட்
இந்த நிலையில், ‘ரணபலி’ திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் நவம்பர் 13 ஆம் தேதி வெளியாகவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here