தொழிலதிபரை கடத்திய வழக்கில் இருவருக்கு 30 ஆண்டுகள் சிறை

புத்ராஜெயா:

2015 ஆம் ஆண்டு 2 மில்லியன் ரிங்கிட் பணத்திற்காக ஒரு தொழிலதிபரை கடத்திய குற்றச்சாட்டில் இரண்டு முன்னாள் ரியல் எஸ்டேட் முகவர்களுக்கு இன்று மேல்முறையீட்டு நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

டத்தோ வசீர் ஆலாம் மைடின் மீரா, டத்தோ அஹ்மட் ஜைடி இப்ராஹிம் மற்றும் டத்தோ எஸ்.எம். கோமதி சுப்பையா ஆகியோர் அடங்கிய மூவர் அடங்கிய நீதிமன்ற பெஞ்ச்சின் இந்த முடிவைத் தொடர்ந்து, குற்றஞ்சாட்டப்பட்ட Lew Ngee Chin மற்றும் Chin Yoon Tack @ Chin Yoon Tock ஆகியோர் தண்டனைக்கு எதிராகச் செய்த மேல்முறையீடுகளை நிராகரித்தனர்.

ஆனால், இருவருக்கும் உயர்நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை நீதிமன்றம் ரத்து செய்து, அதற்கு பதிலாக 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

இதற்கிடையில், வேலையில்லாத மூன்றாவது மேல்முறையீட்டாளரான தெலஹா சஞ்சிஸ், 42, தனது ஆயுள் தண்டனையை ரத்து செய்யக்கோரி கொண்டு வந்த மேல்முறையீட்டை நீதிமன்றம் அனுமதித்தது.

முன்னதாக வெய் பென் வெல்னஸ் நிறுவனத்திடம் பணயத் தொகையாக RM2 மில்லியன் கேட்கும் நோக்கத்துடன், அப்போது 63 வயதாக இருந்த லிம் ஹோ என்ற பெண்மணியை கடத்திச் சென்று, தவறாக அடைத்து வைத்த குற்றச்சாட்டில் மூவருக்கும் உயர் நீதிமன்றம் மார்ச் 9, 2020 அன்று ஆயுள் தண்டனை விதித்தது.

வழக்கின் உண்மைகளின்படி, 2015 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி மாலை 6 மணியளவில் பாதிக்கப்பட்டவர் கடத்தப்பட்டு, கோலாலம்பூரில் உள்ள செராஸ், தாமான் புக்கிட் அங்கெரிக்கில் உள்ள ஓர் இடத்தில் ஏழு நாட்கள் அடைத்து வைக்கப்பட்டார். பணயமாகா கேட்ட பணத்தை குறித்த நிறுவனம் கொடுத்த பின்னர், நவம்பர் 16, 2015 அன்று செந்தூல் LRT நிலையத்திற்கு அருகில் பாதிக்கப்பட்ட பெண்ணை அவர்கள் விட்டுச் சென்றனர்.

சம்பவம் தொடர்பான விசாரணையின் அடிப்படையில் போலீசார் மூவரையும் கைது செய்து 700,000 ரிங்கிட் பணத்தையும் மீட்டனர் என முன்னர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here