மிட்செல் ஸ்டார்க் மீண்டும் முதலிடத்தில்

துபாய்,

கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது. டெஸ்ட் போட்டி பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் ஆஸ்திரேலிய இடக்கை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் (881 புள்ளி) மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகள் வீழ்த்தியன் மூலம் 20 புள்ளி களை கூடுதலாக சேர்த்த அவர் அரியணையில் ஏறி இருக்கிறார்.

கடந்த வாரம் 5 இடங்கள் முன்னேறி முதல்முறையாக முதலிடத்துக்கு வந்த தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் மார்கோ யான்சென் (875 புள்ளி) ஒரே வாரத்தில் முதலிடத்தை இழந்து 2-வது இடத்துக்கு இறங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here