கோலாலம்பூரிலுள்ள சாலையோர உணவுக்கடைத் தொகுதியில் தீ சம்பவம்!

அம்பாங்:

இங்குள்ள தாமான் லெம்பா கெராமட்டில் உள்ள சாலையோர உணவு கடைத் தொகுதி, இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ சம்பவத்தில் எரிந்து நாசமானது.

இன்று சனிக்கிழமை (ஜூலை 27) அதிகாலை 5.49 மணிக்கு சம்பவம் தொடர்பில் அழைப்பு வந்ததையடுத்து, அம்பாங், பாண்டான் மற்றும் வாங்சா மாஜு தீயணைப்பு நிலையங்களில் இருந்து 18 பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை துணைவி இயக்குநர் அமாட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

“எட்டு ஸ்டால்கள் அடங்கிய உணவு கடை தொகுதி தீப்பிடித்து எரிந்தது என்றும், கட்டிடத்தின் 80 விழுக்காடு இடிந்துவிட்டது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சம்பவத்தின் போது எவரும் காயமடையவில்லை எனவும், தீ விபத்துக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here