ஜோகூர் இஸ்தானா பெசாரில் நடந்த திறந்த இல்ல உபசரிப்பில் கலந்துகொண்ட பேரரசர் தம்பதியினர்

ஜோகூர் பாரு:

இஸ்தானா பெசாரில் நடைபெற்ற நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் மாட்சிமை தங்கிய மாமன்னன் சுல்தான் இப்ராஹிம் மற்றும் பேரரசியார் ராஜா சாரித் சோபியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

நோன்புப் பெருநாளின் இரண்டாம் நாளான இன்று, ஜோகூர் அரச குடும்பத்தின் உறுப்பினர்களை சந்திக்கவும், அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கவும் ஏராளமான ஜோகூரியர்கள் கூடி நின்றது பார்ப்பதற்கு மனதை கவரும்வண்ணம் இருந்தது.

இருண்ட வானிலை இருந்தபோதும் மக்கள் அங்கு கூடி நின்று, அரச குடும்பத்தினருக்கு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மேலும் ஜோகூர் இடைக்கால ஆட்சியாளர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம், அவரது மனைவி சே புவான் மஹ்கோடா கலீதா, அவரது மகன் ராஜா முடா ஜோகூர் துங்கு இஸ்கந்தர் இப்னி துங்கு இஸ்மாயில் மற்றும் பிற குழந்தைகளும் கலந்து கொண்டனர்.

மேலும் ஜோகூர் முதல்வர் டத்தோ ஓன் ஹபீஸ் காசி மற்றும் பிற மாநிலத் தலைவர்களும் திறந்த இல்லத்தில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here