பெரியார் அறிவுலகத்திற்கான நூல்களின் கொள்முதலில் ஊழல்: தமிழுக்கு இதைவிடப் பெரிய அவமானம் இல்லை – கமல்ஹாசன்…

சென்னை, கடந்த தி.மு.க. ஆட்சியில் கோவை பெரியார் அறிவுலகத்திற்கான புத்தக கொள்முதலில் பெரும் ஊழல் நடைபெற்றிருப்பதாக அமைச்சர் ராஜ்மோகன் பரபரப்பான குற்றத்தை சாட்டி உள்ளார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அனைத்து நூலகங்களில் இருந்தும் இந்தப் போலி நூல்கள் உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டு வீதியில் கொட்டி எரிக்கப்பட வேண்டும். மோசடி செய்த பதிப்பகங்கள் சீல் வைக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன் என ‘சிந்தை’ கட்டுரையை சுட்டிக்காட்டி மக்கள் நீதி மய்யம் தலைவரும் எம்பியுமான கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,

இத்தகைய போலியான நூல்கள் நீண்ட கால அடிப்படையில் மாபெரும் தீங்குகளை விளைவிக்கும். இவற்றை வாசித்து, குறிப்பெடுத்து, அவை பேச்சிலும் எழுத்திலும் ஆய்விலும் இடம்பெற்றால் தமிழின் மானம் கப்பலேறிவிடும். இந்தக் காரியத்தை எவர் செய்திருந்தாலும் அவர்கள் தமிழுக்குத் துரோகம் இழைத்தவர்கள்.

இந்தப் போலி நூல்கள், அனைத்து நூலகங்களில் இருந்தும் உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டு வீதியில் கொட்டி எரிக்கப்பட வேண்டும். மோசடி செய்த பதிப்பகங்கள் சீல் வைக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த மோசடியை அம்பலப்படுத்தியதற்காக எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் என அதில் பதிவிட்டுள்ளார்,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here