20ஆவது தெலுங்கு மொழி மற்றும் ஒழுக்கநெறி முகாம் – 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்

தாய் மொழியும் ஒழுக்கநெறியும் அனைவருக்கும் இன்றியமையாதது. அந்த வகையில் மலேசிய தெலுங்கு சங்கத்தின் ஏற்பாட்டில் 20ஆவது தெலுங்கு மொழி மற்றும் ஒழுக்கநெறி முகாம் 12 நாட்கள் நடைபெற்றது. மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இந்த முகாமில்  150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த முகாமின் அடிப்படை நோக்கம் தெலுங்கு மொழியையும் கலாச்சாரத்தையும் கற்பிப்பதாகும்.

இந்த முகாமின் நிறைவு அம்சம் இந்தியாவின் புட்டி ஶ்ரீராமுலு தெலுங்கு பல்கலைக்கழகத்தின் மேற்பார்வையில் நடைபெற்றது. மலேசிய தெலுங்கு சங்கத்தின் தேசியத் தலைவர் வெங்கட பிரதாப் தமதுரையில் மொழி என்பது நமது அடையாளம் என்றார். ஓர் இனத்தின் அடையாளமான மொழியை தற்காக்க நாம் ஏதாவது செய்யாமல் போனால் அடுத்த தலைமுறை நம்மை மன்னிக்காது என்றார். இந்த முகாமில் மலேசிய தெலுங்கு சங்கத்தின் தேசிய  உதவித் தலைவரும் கல்வி பிரிவின் தலைவருமான சுரேஷ் நாயுடு மற்றும் மலேசிய தெலுங்கு அகாடமியின் தலைமையாசிரியர் அப்பள நாயுடு மேற்பார்வையில் 15 ஆசிரியர்களின் ஒத்துழைப்போடு நடைபெற்றது.

மலேசியாவில் 70  தெலுங்கு பாடச்சாலைகள் இருந்தன. ஆனால் 30ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கு மொழி பாடச்சாலைகள் மூடப்பட்டன. ஆனால் மொழியை கற்பித்து தர வேண்டும் என்று கடந்த 2003ஆம் ஆண்டு 30 கிளைகளில் வார இறுதியில் கற்பித்து வந்தது. கல்வி கற்ற மாணவர்கள் ஹைதாரபாத் புட்டி ஶ்ரீராமுலு  பல்கலைக்கழகத்தின் தேர்வு தாள்களை கொண்டு கடந்த 5 ஆண்டுகளாக தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.  இந்த முகாம் வழி இதுவரை 7,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here