Nacsa ஆரஞ்சு எச்சரிக்கை நிலையில் உள்ளது, ஆனால் இதுவரை கவலையளிக்கும் இணையவழிச் சம்பவங்கள் எதுவும் உறுதி செய்யப்படவில்லை என ஃபஹ்மி கூறுகிறார்.

மலாக்கா,தேசிய சைபர் பாதுகாப்பு முகமையிடமிருந்து (Nacsa) பெறப்படும் தினசரி அறிக்கைகளின் அடிப்படையில், இதுவரை கவலைப்படத்தக்க வகையிலான எந்தவொரு சைபர் பாதுகாப்புச் சம்பவமும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார். சமீபகாலமாக சமூக ஊடகங்களில் சைபர் தாக்குதல்கள் குறித்த தகவல்கள் பரவி வரும் நிலையில், தேசிய சைபர் பாதுகாப்பு முகமையின் தயார்நிலை தற்போது ‘அம்பர் அலார்ட்’ (amber alert) எனப்படும் நடுத்தர நிலையில் இருப்பதாக அவர் கூறினார்.

சைபர் ஊடுருவல்கள் குறித்த குற்றச்சாட்டுகளை அந்த முகமை ஆய்வு செய்துள்ளதாகவும், ஆனால் அவை உண்மையானவைதானா என்பதை இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் ஃபஹ்மி தெரிவித்தார். நான் தேசிய சைபர் பாதுகாப்பு முகமையிடமிருந்து தினசரி அறிக்கைகளைப் பெறுகிறேன்; இதுவரை கவலைப்படத்தக்க எந்தச் சம்பவமும் பதிவாகவில்லை. இருப்பினும், அந்த முகமையின் தயார்நிலை தற்போது ‘amber alert’ நிலையில் உள்ளது. இது நடுத்தர அளவிலான தயார்நிலையைக் குறிக்கிறது.

சைபர் தாக்குதல்கள் மற்றும் ஊடுருவல்கள் குறித்த புகார்கள் வந்துள்ளன. ஆனால் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் இச்சம்பவங்கள் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று அந்த முகமை என்னிடம் தெரிவித்துள்ளது. ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், அது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை தேசிய சைபர் பாதுகாப்பு முகமைதான் வழங்கும். இதுவரை அத்தகைய உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை என்று அவர் கூறினார்.

பக்காத்தான் ஹாரப்பான் (PH) கூட்டணியின் தகவல் தொடர்பு இயக்குநராகவும் இருக்கும் ஃபஹ்மி, மலாக்கா மாநிலத் தேர்தலில் ‘ஆயர் மோலெக்’ (Ayer Molek) சட்டமன்றத் தொகுதிக்கான பக்காத்தான் ஹாரப்பான் வேட்பாளர் முஹம்மது ஹகிமின் மொக்தாருடன், நேற்று அங்குள்ள ஆயர் மோலெக் இரவுச் சந்தையில் பொதுமக்களைச் சந்திக்கும் நிகழ்வில் கலந்துகொண்டபோது இவ்வாறு கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here