மலாக்கா மாநிலத் தேர்தல்: ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற ஆர்வத்துடன் திரளும் வாக்காளர்கள்!

(ரெ. மாலினி)

மலாக்கா, 

மலாக்கா மாநிலத்தின் 16ஆவது சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை பல்வேறு வயதினரும் தங்களது வாக்குரிமையைப் பயன்படுத்துவதற்காக வாக்குச்சாவடிகளுக்கு வருகை தந்து வருகின்றனர்.

குறிப்பாக, வேலைக்குச் செல்வதற்கு முன்பாகவே வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கில் சிலர் அதிகாலையிலேயே வாக்குச்சாவடிகளுக்கு வருகை தந்தனர். இது தேர்தலில் பொதுமக்கள் கொண்டுள்ள ஆர்வத்தையும் ஜனநாயகப் பொறுப்புணர்வையும் வெளிப்படுத்துகிறது.

 மக்களின் விருப்பத்தைப் பிரதிபலிக்கும் முக்கிய ஜனநாயக நடைமுறையாக விளங்கும் இத்தேர்தலில், ஒவ்வொரு வாக்கும் முக்கியத்துவம் பெறுகிறது. எனவே, தகுதியுடைய வாக்காளர்கள் அனைவரும் தங்களது வாக்குரிமையைப் பொறுப்புடன் பயன்படுத்துவது அவசியமாகும்.

இதனிடையே, மலாக்காவில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் இருப்பதால், வாக்காளர்கள் குடைகளை எடுத்துச் சென்று சிரமமின்றி வாக்களிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அரசியல் கட்சிகளின் வெற்றி தோல்விகளைத் தாண்டி, மக்களின் குரலும் விருப்பமும் பிரதிபலிக்கும் வகையில் தேர்தல் அமைதியாகவும் சுமுகமாகவும் நடைபெற வேண்டும் என்பதே பொதுவான எதிர்பார்ப்பாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here