கிள்ளான் பகுதியில் புக்கிட் அமான் குற்றத்தடுப்பு பிரிவினர் சோதனை; 100க்கும் மேற்பட்டோர் கைது

கோலாலம்பூர்:

கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் புக்கிட் அமான் சிஐடி பிரிவினர் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட கும்பலைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஒப்ஸ் காஸ் அமான் ஃபேஸ் 1 என்ற குறியீட்டுப் பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கை, கிள்ளான் மாவட்டம் முழுவதும் ஜனவரி 15 முதல் சனிக்கிழமை (ஜனவரி 20) வரை நடத்தப்பட்டது.

சூதாட்டம் மற்றும் ரகசியச் சங்கங்கள் பிரிவின் (டி7) தலைமையில், தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு ஏஜென்சியின் ஒத்துழைப்புடன், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று புக்கிட் அமான் சிஐடியின் துணை இயக்குனர் (புலனாய்வு/நடவடிக்கைகள்) கொமால் ஃபாடில் மார்சஸ் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கையில் 120 உள்ளூர் மற்றும் 13 வெளிநாட்டினர் என மொத்தம் 133 நபர்கள் பாதாள உலக கும்பலுடன் தொடர்புடையவர்கள் பிடிபட்டுள்ளதாக அவர் கூறினார்.

மேலும் “கோலா மாவட்டத்தில் பரவலாக இயங்கும் இரண்டு முக்கிய கும்பல்களின் வருமான ஆதாரங்களையும் இந்த நடவடிக்கை மூலம் புக்கிட் அமான் முடக்கியது என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here