திரெங்கானு வெள்ள நிலவரம்: மாற்றமின்றி 151 பேர் தொடர்ந்தும் நிவாரண மையத்தில் தஞ்சம்

கோல திரெங்கானு:

கடந்த திங்கட்கிழமை முதல் திரெங்கானு மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினைத் தொடர்ந்து, இன்று காலை 8 மணி நிலவரப்படி 42 குடும்பங்களைச் சேர்ந்த 151 பேர் தொடர்ந்து தற்காலிக நிவாரண மையத்தில் (PPS) தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை முதல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என திரெங்கானு மாநிலப் பேரிடர் மேலாண்மைக் குழுச் செயலகத்தின் (JPBN) பேச்சாளர் தெரிவித்தார்.

“மாநிலத்தில் தற்போது செயல்பட்டு வரும் ஒரே நிவாரண மையமான கோலாநெருஸ், தோக் ஜெம்பால் பல்நோக்கு மண்டபத்தில் பாதிக்கப்பட்ட அனைவரும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை கோல திரெங்கானு சுற்றுவட்டாரப் பகுதிகளில் லேசான தூறல் மழை பெய்து வருகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here