செல்வ வளத்தை தரும் மந்திரம்

நாம் பெருமாளை வழிபாடு செய்யும்பொழுது பெருமானின் அருளை நம்மால் பரிபூரணமாக பெற முடியும். அப்படிப்பட்ட பெருமாளுக்குரிய நாளில் நாம் பெருமாளை நினைத்து மந்திரங்களை கூறி வழிபாடு செய்வதன் மூலம் அவரின் அருளாலும் பத்மாவதி தாயாரின் அருளாலும் செல்வ செழிப்புடன் வாழ முடியும்.

எந்த இடத்தில் இருந்து கொண்டு வேண்டுமானாலும் கூறலாம். இயன்றவர்கள் அருகில் இருக்கக்கூடிய பெருமாள் ஆலயத்திற்கு சென்று பெருமாளை தரிசனம் செய்துவிட்டு இந்த மந்திரத்தை கூறும் பொழுது அதிக அளவில் பலன் கிடைக்கும்.

இந்த மந்திரத்தை கூறுவதற்கு முன்பாக திருப்பதியில் இருக்கக்கூடிய வெங்கடாசலபதி பெருமாளையும் பத்மாவதி தாயாரையும் மனதார நினைத்துக் கொண்டு கூற வேண்டும். தொடர்ச்சியாக 20 நிமிடம் இந்த மந்திரத்தை கூறினால் போதும். நிறுத்தி நிதானத்துடன் பத்மாவதி சமேத சீனிவாச பெருமாளை நினைத்துக் கொண்டு கூறுபவர்களுக்கு அவர்கள் செய்த பாவங்கள் நீங்குவதோடு மகாலட்சுமி தாயாரின் அருளால் செல்வ செழிப்பு உயரும் என்று கூறப்படுகிறது.

மந்திரம்

” ஸ்ரீ பத்மாவதி பிரியா கோவிந்தாய நமஹ “

எளிமையான இந்த மந்திரத்தை முழுமனதோடு கூறி செய்த பாவங்கள் அனைத்தையும் நீக்கி செல்வ செழிப்புடன் வாழலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here