திரெங்கானுவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் சாதாரண உடைகளை அணிந்து பள்ளிக்கு செல்ல அனுமதி

கோலா திரெங்கானு:

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள மாணவர்கள் சாதாரண உடையில் பள்ளிக்கு செல்லலாம் என திரெங்கானு கல்வித்துறை தெரிவித்துள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை கல்வித்துறை புரிந்து கொண்டுள்ளதாகவும், அவர்களின் சுமையை குறைக்க இந்த சலுகையை வழங்குவதாகவும் அதன் துணை இயக்குனர் (பள்ளி மேலாண்மை துறை) அஸ்மான் ஓத்மான் @ அப்துல்லா கூறினார்.

மாணவர்களின் சீருடைகள் வெள்ளத்தால் சேதமடைந்தாலோ அல்லது வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டாலோ அவர்கள் கவலைப்பட த்தேவையில்லை, வரும் ஜனவரி 2 ஆம் தேதியன்று பள்ளிகள் திறக்கப்படும் போது அவர்கள் சாதாரண உடையிலும் பள்ளிக்கு வரலாம் என்று நான் மாணவர்களுக்கு அறிவுறுத்த விரும்புகிறேன்.

மேலும் புத்தகங்கள், பயிற்சிப் புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் சேதமடைந்தால், கவலைப்பட வேண்டாம் … பள்ளிக்கு வாருங்கள். உங்களின் பாடப்புத்தகங்கள் சேதமடைந்தால், உங்கள் வகுப்பு ஆசிரியரிடம் தெரிவியுங்கள்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here