ஹர்ஷவர்தனின் “சம்மர் ஹாலிடேஸ்” படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு…

கோடை விடுமுறை, பள்ளிப் பருவக் குறும்புகள், கிராமத்து நினைவுகள் என குழந்தைப் பருவ அனுபவங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘சம்மர் ஹாலிடேஸ்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4ம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ஸ்ரீகர் இயக்கிய ‘சம்மர் ஹாலிடேஸ்’ படம் கடந்த நவம்பர் 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் ஹர்ஷவர்தன், வாசுகி ஆனந்த், கே.வி., உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ரமணா பார்கவ், ஹர்ஷினி கோடூரி, மகேஷ் சிந்தலா உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். குழந்தைப் பருவத்தின் இனிய நினைவுகளை மீண்டும் நினைவூட்டும் வகையில் இப்படம் உருவாகி உள்ளது.

‘தி கேர்ள்பிரண்ட்’, ‘சென்னை லவ் ஸ்டோரி’, ‘கப்பிள் ஃபிரெண்ட்லி’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்த தீரஜ் மொகிலினேனி, தனது தீரஜ் மொகிலினேனி என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் மூலம் இப்படத்தைத் தயாரித்துள்ளார்.

பெற்றோருக்கும் குழந்தைகளுக்குமான கதை
கிரிக்கெட் மற்றும் விளையாட்டுகளில் ஆர்வம் கொண்ட சிறுவனுக்கும், அவன் படிப்பில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என எதிர்பார்க்கும் தந்தைக்கும் இடையிலான முரண்பாடுகள் ‘சம்மர் ஹாலிடேஸ்’ படத்தில் இடம்பெற்றுள்ளன. தந்தையாக ஹர்ஷ வர்தன் நடித்துள்ளார். சிறுவனின் கனவுகளுக்கு ஆதரவாக இருக்கும் தாயாக வாசுகி ஆனந்த் நடித்துள்ளார்.

நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகரமான காட்சிகளுடன் அமைந்துள்ள இப்படம், குழந்தைகளின் கனவுகள், பெற்றோரின் எதிர்பார்ப்புகள் மற்றும் பொறுப்புகள் குறித்த கருத்துகளையும் பேசுகிறது. இயற்கை எழில் நிறைந்த காட்சிகளும், சின்ஜித் யெர்ரமில்லியின் இசையும் டிரெய்லருக்கு வலுசேர்க்கின்றன.

ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
கோடை விடுமுறை, பள்ளிப் பருவக் குறும்புகள், கிராமத்து நினைவுகள் என குழந்தைப் பருவ அனுபவங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘சம்மர் ஹாலிடேஸ்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4ம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here